ஹலோ வாசகர்களே..!

வருகிற 5-ம் தேதியன்று அதாவது, வெள்ளிக்கிழமையன்று 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய நிதி அமைச்சருக்கு இது முதல் பட்ஜெட் என்றாலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துகிற மாதிரி இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி வரம்பினை ரூ.2.5 லட்சத்தி லிருந்து குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்துக்கு அதிகரிக்க வேண்டும். ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் வரித் தள்ளுபடி என்றிருப்பதை மாற்றி, அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை வரிச் சலுகை அளிப்பது அவசியம். இதனால் மக்களுக்கு இன்னும் சில ஆயிரம் ரூபாய் மிச்சமாகும். விலைவாசி கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், அடிப்படை வரி வரம்பினை உயர்த்துவது அவசியம்.

மேலும், கிட்டத்தட்ட 15 வகையான முதலீடுகளுக்குச் சேர்த்துத்தான் தற்போது 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரம்பினைக் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சமாக உயர்த்தினால் சம்பளம் பெறும் நடுத்தர மக்கள் அனைவரும் பயனடைவார்கள். இதனால் அரசுக்குக் கிடைக்கும் வரி வருமானம் சிறிது குறையும்; எனினும் மிச்சமாகும் பணத்தை மக்கள் செலவழிப்பதன்மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவோம் எனக் கடந்த ஆட்சியிலேயே அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த இலக்கினை அடையத் தேவையான நடவடிக்கைகளை இந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் எடுக்கவேண்டும். குறிப்பாக, நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்க அதிக அளவில் நிதி ஒதுக்கவேண்டும்.

உள்கட்டமைப்புத் திட்டங்கள் இன்னும் பெரிய அளவில் நிறுவப்படாததன் விளைவாகவே, நம் நாட்டில் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படாமல் இருக்கிறது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதும் குறைவாக இருக்கிறது. இதற்கொரு தீர்வாக, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களுக்குக் குறைந்தது 10 ஆண்டுகளுக் காவது வருமான வரிவிலக்கு அளிக்கவேண்டும். இதன்மூலம் எல்லா இடங்களிலும் தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்புகள் பெருகும்.

சர்வதேசப் பிரச்னைகள் காரணமாக தற்போது நமது பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கிறது. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன்மூலம், நமது பொருளாதார வளர்ச்சியினை அதிகரிக்கும் திட்டங்களைத் தீட்டவேண்டும்.

இந்திரா காந்திக்குப் பிறகு நிதி அமைச்சர் பதவியினை ஏற்றிருக்கும் ஒரு பெண் என்கிற வகையில், நாட்டின் அனைத்துப் பிரிவினரும் நன்மை பெறுகிற மாதிரி மத்திய நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டினைத் தாக்கல் செய்வார் என்று நாம் எதிர்பார்ப்போம்!

- ஆசிரியர்