
அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'தானே' புயலின் கோரத் தாண்டவம் ஏற்படுத்திய அழிவுகளில் இருந்து கடலூர், புதுச்சேரி மக்களை மீட்டு எடுப்பதற்கான துயர் துடைப்புத் திட்டத்துக்கு உதவிடும் வகையில், முதல் பங்களிப்பாக விகடன் குழும நிறுவனங்கள் சார்பாக

10 லட்சம் அளிக்க முன்வந்துள்ளதை அறிவீர்கள். அன்பு வாசகர்களே... நீங்களும் அவரவரால் இயன்ற நிதியை அனுப்பத் தொடங்கிவிட்டீர்கள். 'எந்தப் பெயருக்கு நிதி அனுப்ப வேண்டும்? எப்படி அனுப்ப வேண்டும்?’ என்று தொடர்கிறது உங்களின் மனிதநேயம் மிக்க விசாரணை.
நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரும் நம் தமிழ்ச் சொந்தங்களின் துயர் துடைக்க முன்வரலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009, நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.
வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918-க்கு

(ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IDIB 000C032, எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக் கொள்ளலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், எதிர்பக்கம் நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
உங்களுக்கான ரசீதுகளை அனுப்பிவைப்பதோடு, துயர் துடைப்புத் திட்டத்தில் தொடரும் முன்னேற்றங்களை விகடன் இணையதளத்தின் மூலம் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். www.vikatan.com/thane என்ற இணைய முகவரியில், இது தொடர்பான பூர்வாங்க விவரங்களை இப்போதே நீங்கள் காணலாம். நிதி அளித்துவரும் நல்ல மனங்களின் பட்டியலும், நமது பல்வேறு நிவாரண நடவடிக்கைக்கான செலவுக் கணக்கும் அந்த இணைய முகவரியின் வாயிலாக அடுத்தடுத்து உங்கள் முன் சமர்ப்பிக்கப்படும்.
வாருங்கள் வாசகர்களே... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!
- ஆசிரியர்

