கடலூர் தொகுதி பா.ம.க வேட்பாளர் அறிவிப்பு - யார் இந்த கோவிந்தசாமி? | Cuddalore PMK Candidate announced

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:23 (18/03/2019)

கடலூர் தொகுதி பா.ம.க வேட்பாளர் அறிவிப்பு - யார் இந்த கோவிந்தசாமி?

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கியது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிடுகிறது. பா.ம.க நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது, அதில் விருத்தாசலத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.கோவிந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

டாக்டர் கோவிந்தசாமி

கோவிந்தசாமி மருத்துவ மேற்படிப்பு படித்துவிட்டு விருத்தாசலத்தில் க்ளினிக் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2001-ம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மீண்டும் 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை எதிர்த்துப்  போட்டியிட்டு தோல்வியுற்றார். விருத்தாசலம் அருகே உள்ள விளக்கப்பாடி சொந்த ஊர். மனைவி டாக்டர் ராமதிலகம், மகள் டாக்டர் இந்துமதி, மகன்கள் மகேந்திரன், அருண் ஆகியோரும் மருத்துவர்களாகதான் உள்ளனர். விருத்தாசலம் மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டம் முழுவதும் கட்சித் தலைமை அறிவிக்கும் அனைத்துப் போராட்டகளையும் முன்னின்று நடத்தியுள்ளார். பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கும் மிகவும் நெருக்கமானவர்.