திருமாவளவன் vs சந்திரசேகரன்! - சிதம்பரம் தொகுதி அப்டேட்ஸ் | Chidambaram M.P. Candidates updates

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:23 (18/03/2019)

திருமாவளவன் vs சந்திரசேகரன்! - சிதம்பரம் தொகுதி அப்டேட்ஸ்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் அரியலூர் 
மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் நிற்கிறார். 

 

திருமாவளவன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க 3 முறையும், பா.ம.க 3 முறையும், 
விடுதலைச் சிறுத்தைகள் (திமுக கூட்டணி) 1, அ.தி.மு.க 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.  தொடர்ந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வரும் திருமாவளவன்  2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். பின்னர் 2006-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி, 2009-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி, 2011-ல் நடந்த சட்டசபை தேர்லிலும் தி.மு.க-வுடன் கூட்டணி, 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி-யானார்.  இந்த முறை சிதம்பரத்தில் சுயேச்சை சின்னத்தில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தொல்காப்பியன், பெரியம்மாள் ஆகியோருக்குக் கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம்  தேதி பிறந்தார். பி.எஸ்ஸி வேதியியல், எம்.ஏ. கிரிமினாலஜி, பி.எல், பி.ஹெச்டி படித்துள்ளார். மேலும், தமிழக அரசின் தடவியல் துறையில் அறிவியல் உதவியாளராக பணியாற்றி வந்தார். பின்பு 1999-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட தன் அரசுப் பணியை ராஜினமா செய்தார். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

சந்திரசேகரர்

இவருக்குப் போட்டியாக அ.தி.மு.க சார்பில் முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் போட்டியிட உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உணவகம் மற்றும் லாட்ஜ் நடத்தி வருகிறார். அதே போல் சென்னை கோயம்பேடு அங்காடியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு அரசு தலைமை கொறடா தாமரை. ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமலிங்கம் ஆகியோர் ஆதரவளிப்பதாலும், அரியலூர் மாவட்டத்தில் செல்வாக்கு உள்ளதால் இவருக்குச் சிதம்பரம் தொகுதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். 

இளவரசன்

அதே போல் அ.ம.மு.க சார்பில் வழக்கறிஞரும்,ஐ.எ.எஸ். அகாடமி நிறுவனருமான இளவரசன் போட்டியிட உள்ளார். இவருடைய மனைவி சரஸ்வதி ஊரக வளர்ச்சித்துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.இவருடைய மனைவிதான் தினகரனிடம் பேசி சீட் வாங்கிக்கொடுத்துள்ளார் என்று பரவலாகப் பேச்சுக்கள் நிலவுகிறது.