மக்கள் நீதி மய்யத்திலிருந்து குமரவேல் விலகல் - என்ன காரணம்? | Kumaravel sends letter to Kamal Haasan quitting Makkal Needhi Maiam

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:21 (19/03/2019)

மக்கள் நீதி மய்யத்திலிருந்து குமரவேல் விலகல் - என்ன காரணம்?

கடலூர், நாகை மாவட்ட மக்கள் நீதி மையப் பொறுப்பாளர் கட்சியில் விலகுவதாகக் கூறி, கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்

சி.கே. குமரவேல்

கடலூர், நாகை மாவட்ட மக்கள் நீதி மையம் பொறுப்பாளராகவும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர், சி.கே. குமரவேல். தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி ஒன்றுக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்தவர். கமலின் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின்  அனைத்து ஏற்பாடுகளையும்  சி.கே குமரவேல்தான் செய்திருந்தார். அப்போதே, சி.கே. குமரவேல்தான் கடலூர் வேட்பாளர் எனவும், தேர்தலுக்கான பணிகளை அவரது ஆதரவாளர்கள் தொடங்கி நடத்திவந்தனர். கடலூர் தொகுதியில் போட்டியிட விரும்ப மனுவும் செய்திருந்தார்.

கமல்

இந்நிலையில், கடலூர் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த சி.கே. குமரவேல், கட்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசனுக்கு கடிதம் எழுதியதால் கடலூரில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து விசாரித்தபோது, ``கூட்டணி அமையாமல் கமல்ஹாசன்  தனித்து நிற்பதாக அறிவித்துள்ளார். குமரவேலுக்கு சிலர் கொடுத்த அழுத்தத்தினால், அவர் கட்சியில் இருந்து விலகுவதாக் கூறப்படுகிறது.”   

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, `` விலகுவதுகுறித்து கட்சித் தலைமைக்குக் கடிதம் கொடுத்துள்ளேன். தலைமை ஏற்றுக்கொண்டவுடன் காரணம் குறித்துக்கூறுகிறேன்'' என்றார்.