‘நேற்று வந்தவர்கள் எல்லாம் நேர்காணல் எடுத்தால் எப்படி?’ - கமலை விமர்சிக்கும் குமரவேல் | Makkal Needhi Maiyam Senior leader CK Kumaravel quits the party

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:23 (19/03/2019)

‘நேற்று வந்தவர்கள் எல்லாம் நேர்காணல் எடுத்தால் எப்படி?’ - கமலை விமர்சிக்கும் குமரவேல்

என முடிவுசெய்து, தேர்தலுக்கான பணிகளை அவரது ஆதரவாளர்கள் தொடங்கி நடத்திவந்தனர். கடலூர் தொகுதியில் போட்டியிட தலைமையிடம் விருப்ப மனுவும் அளித்திருந்தார். அவர் கட்சி கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியைவிட்டு விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

சி.கே.குமரவேல்

கடலூர், நாகை மாவட்ட மக்கள் நீதி மையம் பொறுப்பாளராகவும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர் சி.கே. குமரவேல். கடந்த ஜனவரி மாதம், கடலூர் மாவட்டத்தில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்தபோது, அனைத்து ஏற்பாடுகளையும்  சி.கே. குமரவேல்தான் செய்திருந்தார். அப்போதே,  சி.கே. குமரவேல்தான் கடலூர் வேட்பாளர் என முடிவுசெய்து, தேர்தலுக்கான பணிகளை அவரது ஆதரவாளர்கள் தொடங்கி நடத்திவந்தனர். கடலூர் தொகுதியில்  போட்டியிட தலைமையிடம் விருப்ப மனுவும் அளித்திருந்தார். கட்சியில் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாகத் தலைமைக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி,  சமூக வலைதளங்களில் கடலூர் சி.கே. குமரவேல் மக்கள் நீதி மையம் சார்பில் கடலூர் தொகுயில் போட்டியிட உள்ளதாக வெளியிட்டுள்ளார்.  இதோடு, நேர்காணலுக்கு  வராமல் தேர்தலில் போட்டியிட  உள்ளதாக அறிவித்தது குறித்து விளக்கம் கேட்டதற்கு, அவர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது.  வேட்பாளர் தேர்வு முறைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், கட்சித் தலைமை  அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் அறிக்கை

இதுகுறித்து சி.கே. குமரவேலிடம் தொடர்புகொண்டு கேட்டப்போது, ''கட்சியின் நிர்வாகக் குழு எடுக்கும் முடிவை இங்குள்ள கட்சியினர் யாரும் பின்பற்றுவது கிடையாது. மேலும், கட்சியில் உட்கட்சிப் பூசல் அதிகமாக உள்ளது. இதுகுறித்து தலைமைக்குப் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கட்சித் தலைமை கடலூரில் நீங்கள்தான் நிற்க வேண்டும். தோற்றாலும் பரவாயில்லை நீங்கள்தான்
வேட்பாளர் எனக் கூறினார்கள். கட்சி  சொன்னதால், நான் போட்டியிடுவதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவந்தேன். கட்சியில் என்னை  வேட்பாளர் எனக் கூறியதால், நான் சமூக வலைதளங்களில் பதிவுசெய்தேன். கட்சி நடத்தும் நேர்காணலில், கட்சிக்கு இப்ப வந்த கோவை சரளா அமர்ந்துள்ளார். என்னை கோவை சரளா நேர்காணல் செய்தார் என வெளியில் சொல்ல முடியுமா,  இதையெல்லாம் வைத்துதான் நான் ராஜினமா செய்தேன்'' என்று கூறினார்.