Published:Updated:

`130 கோடி இந்தியர்களும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!'- எதிர்க்கட்சிகளைச் சாடும் மோடி

`130 கோடி இந்தியர்களும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!'- எதிர்க்கட்சிகளைச் சாடும் மோடி
`130 கோடி இந்தியர்களும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!'- எதிர்க்கட்சிகளைச் சாடும் மோடி

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.கவும் இறங்கியுள்ளனர். பா.ஜ.க-வின் 5 ஆண்டுக்கால ஆட்சியை விமர்சித்து காங்கிரஸ் கடுமையான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. ரபேல் ஊழல், புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பிவருகிறது.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசினார். இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சந்தேகம் எழுப்பியிருந்தார். மேலும், அந்தப் பேட்டியில் ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர் பாகிஸ்தானின் தேசிய நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாட ஆரம்பித்துவிட்டார். இது இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை அர்த்தமில்லாமல் ஆக்குவதாகும். எதிர்க்கட்சிகள் திரும்பத் திரும்ப இதைத்தான் செய்கின்றன. நான் என்னுடைய இந்தியச் சகோதரர்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர்கள் விடும் அறிக்கைகளைக் கேளுங்கள். நான் அவர்களிடம் சொல்லிக்கொள்வதெல்லாம், உங்களின் செயல்பாடுகளை 130 கோடி இந்தியர்களும் மன்னிக்க மாட்டார்கள் என்பதுதான். நமது வீரர்களுக்கு உறுதுணையாக இந்தியா நிற்கும்'' என ட்வீட் செய்துள்ளார்.