மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் | Cuddalore Nam Tamilar candidate file Namination

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (22/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (22/03/2019)

மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். கடலூரில், நாம் தமிழர் கட்சி சார்பில் கடலூர் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த ரவியின் மனைவி சித்ரா (30) போட்டியிடுகிறார். பி.காம் பட்டதாரியான இவருக்கு இனியா, சிவானி என இரண்டு மகள்களும், பிரபாகரன் என்ற மகனும் உள்ளனர்.

சித்ரா

நாம் தமிழர் கட்சி கடலூர் வேட்பாளராக இன்று  இவர் மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். சிதம்பரம் சாலையில் இருந்து ஊர்வலமாக அண்ணா பாலம், மஞ்சக்குப்பம் வழியாக கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்து, தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சித்ரா, மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல்செய்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.