Published:Updated:

விண்வெளியில் இந்தியா புதிய சாதனை படைத்துவிட்டது - பெருமிதம்கொள்ளும் பிரதமர் மோடி!

விண்வெளியில் இந்தியா புதிய சாதனை படைத்துவிட்டது - பெருமிதம்கொள்ளும் பிரதமர் மோடி!
விண்வெளியில் இந்தியா புதிய சாதனை படைத்துவிட்டது - பெருமிதம்கொள்ளும் பிரதமர் மோடி!
விண்வெளியில் இந்தியா புதிய சாதனை படைத்துவிட்டது - பெருமிதம்கொள்ளும் பிரதமர் மோடி!

நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. சில மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ளது. கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகள் மக்களை முற்றுகையிட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலில், 11.45 - 12 மணிக்குள் உரையாற்றுவார் எனக் கூறப்பட்ட நிலையில், 12.25 மணிக்கு மோடி பேசினார். 

அப்போது, ``இந்தியா இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா இன்று தனது பெயரைப் பதிவு செய்துள்ளது. விண்வெளித் துறையில், இது இந்தியாவின் வியத்தகு சாதனை ஆகும். விண்ணில் செயற்கைகோள் ஒன்றை சுட்டுவீழ்த்தும் `மிஷன் சக்தி' சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. சாட்டிலைட் வெப்பன் A-SAT `மிஷன் சக்தி' என்ற சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தச் சோதனை, இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. இதன்மூலம், செயற்கைக்கோளை துல்லியமாகத் தாக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது. சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்தது. புவியிலிருந்து 380 கிமீ தொலைவில் இருக்கும் செயற்கைகோள் `மிஷன் சக்தி' மூலம் துல்லியமாக அழிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த வெற்றியால் நாட்டின் பாதுகாப்பு பலம் பெறும்.  இந்தச் சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய ஆய்வாளர்களுக்கு வாழ்த்துகள்" என்று பேசியுள்ளார்.