Published:Updated:

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

நெகிழ வைத்த குழந்தைகள்!

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

'உதவி செய்வதற்குப் பணம் முக்கியம் இல்லை... மனம்தான் வேண்டும்’ என்று பொட்டில் அறைந்தார் போல காட்டி விட்டார்கள் திருப்பூரைச் சேர்ந்த காதுகேளாத, வாய்பேசாத மாணவ, மாணவியர்கள். கடலூர் பாதிப்பை அறிந்து அதிர்ச்சியும் அனுதாபமும் அடைந்திருக்கிறார்கள். அதுவரை அவர்கள் சேமித்துவந்த உண்டியலை, ''இதை பாதிக்கப்பட்டவங்களுக்கு அனுப்புங்க சார்...'' என்று, பள்ளி நிர்வாகி முருகசாமியிடம் மனப்பூர்வமாக கொடுத்து இருக்கிறார்கள். அவர் அனுப்பி வைத்த ஏழு உண்டியல்கள் நமக்கு வந்து சேர்ந்தன. அத்துடன் இருந்த முருகசாமியின் கடிதத்தில் 'விகடனில் பதிவான தானே புயல் கட்டுரையை, குக்கூ குழந்தைகள் வெளி நண்பர் குமரன் என் குழந்தைகளோடு பகிர்ந்து கொண்ட வேளையில், நிறைய குழந்தைகளின் கண்களில் கண்ணீர்... பெருமூச்சு. அடுத்த நாள் அந்த மக்களுக்காக இறை வேண்டலுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. விகடனின் உயர் கருணைக்கு எம் குழந்தைகளின் சிறிய பங்களிப்பு அவர்களது சேமிப்பிலிருந்து... பெற்றுக்கொள்ளுங்கள்!’ என்று எழுதி இருந்தது. அந்த உண்டியல்களில் இருந்த தொகை

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

8,343.25. இந்தத்தொகை ஆயிரம் கோடிகளுக்குச் சமம்!

சாலியந்தோப்புக்கு கூரை மூங்கில்!

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

''தானே புயலில் வீடுகளை இழந்து 100 குடும்பத்தினர் உறங்கவும் இடம் இல்லாமல் தவிக்கி றோம். எங்களுக்கு ஏதாவது வழி செய்ய முடியுமா?'' என சிதம்பரம் அருகே உள்ள சாலியந்தோப்பு கிராமத் தில் இருந்து நமக்கு விண்ணப்பம் வந்தது.

100 வீடுகளுக்கான மூங்கில்கள், 12 ஆயிரம் கீற்று மட்டைகள், 150 கிலோ கயிறு, இணைப்பதற்கான 1,000 பாளைகள் என சாலியந்தோப்பு கிராமத்துக்கான அவசியத் தேவைகளை நிறைவேற்றும் வேலைகள் கடகடவென நடந்தன. கீற்றுகளுக்கான மொத்தச் செலவையும் சினிமா இயக்குநர் சசிகுமார் ஏற்றுக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் நம் வாசகரான முகமது அசாருதீன், கயிறு மற்றும் பாளைகள் ஆகியவற்றுக்கான செலவை ஏற்றுக் கொண்டார். 1,000 மூங்கில் கழிகளை நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் ஸ்ரீதுர்கா பவன் உணவகம் நடத்தும் செல்வம் வழங்கினார். இவர்கள் மூவரும் இணைந்து 100 வீடுகளுக்கு உயிர் கொடுத்தார்கள்.

பத்திரக்கோட்டையில் மருத்துவ முகாம்!

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

சென்னை (கிழக்கு) ராஜா அண்ணாமலை புரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.விஸ்வநாதன், செயலாளர் ஆரியோ பாபு, அடுத்த வருடத்துக்கான தலைவர் பி.டி.குமார், இளைஞர் நலன் பிரிவு இயக்குநர் பி.ரகு நாதன் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் மருத்துவ உதவிகள் செய்ய முன்வந்தனர்.

உடனடியாக, கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதி களில் ஆய்வு நடத்திய 'டாக்டர் விகடன்’ குழுவினர், பத்திரக்கோட்டை கிராமத்தைத் தேர்வு செய்தார்கள். கடந்த 21-ம் தேதி அங்கே மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை செட்டிநாடு ஹெல்த் சிட்டியைச் சேர்ந்த கண்-காது-மூக்கு, தோல், பொதுமருத்துவம், நோய்த்தடுப்பு மற்றும் சமூக மருத்துவம், மனநலம், எலும்பு, பல் போன்ற எட்டு பிரிவு களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.

இந்த முகாமில் பத்திரக்கோட்டை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 550 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் செட்டிநாடு ஹெல்த் சிட்டி சார்பில் வழங்கப்பட்டன. மேலும், அப்பல்லோ பார்மஸி சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.  சிலருக்கு இதயநோய் போன்ற பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களுக்கு செட்டிநாடு ஹெல்த் சிட்டியிலேயே அரசு காப்பீட்டைப் பயன்படுத்தி, இலவச மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக் கப்பட்டது.

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!