Published:Updated:

`சுனாமி, புயல், பூகம்பம்... எது வந்தாலும் அசைக்க முடியாது!’ - சேலத்தில் அதிர்ந்த பன்னீர்செல்வம்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம், நேற்று இரவு சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் சரவணனை ஆதரித்து, சேலம் தாதகாப்பட்டி, வின்சென்ட், கன்னங்குறிச்சி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

பன்னீர்செல்வம், ``ஒரு பக்கம் நல்லவர்களாகிய நாம்  சேர்ந்த தர்மத்தின் கூட்டணி. இன்னொரு பக்கம் அதர்மத்தால் ஆன கூட்டணி. தி.மு.க, மத்திய அரசில் 10 ஆண்டு காலம் கூட்டணியில் இருந்தார்கள். ஆனால், உருப்படியாக ஒரு திட்டத்தைக்கூட கொண்டு வரவில்லை. சேது சமுத்திரத் திட்டம் அமைப்பதாகக் கூறி 40 ஆயிரம் கோடியை கடலில் போட்டார்கள்.

தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னையாக இருக்கும் காவிரி நதி நீர்ப் பங்கீட்டின் இறுதித் தீர்ப்பு 2007 -ல் வந்தது. அப்போது, தி.மு.க மத்தியில் காங்கிரஸோடு கூட்டணியில் இருந்தது. அதை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென அம்மா போராடி, 2013 அரசிதழில் வெளியிட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிட்டு அம்மா மரணம் அடைந்தார்.

`சுனாமி, புயல், பூகம்பம்... எது வந்தாலும் அசைக்க முடியாது!’ - சேலத்தில் அதிர்ந்த பன்னீர்செல்வம்

இப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைத்துக்கொடுத்தவர் அண்ணார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, தி.மு.க மக்களை ஏமாற்றவும் வன்முறையை ஏவவும் வருகிறார்கள். அ.தி.மு.க காணாமல் போய்விடும் என்று பிரசாரத்தில் சொல்லுகிறார். 1 1/2 கோடி தொண்டர்களைக் கொண்ட அ.தி.மு.க, எந்தக் கொம்பனாலும் அசைத்துப்பார்க்க முடியாத ஆலமரம்.

இது, சுனாமி வந்தாலும் புயல் வந்தாலும், பூகம்பம் வந்தாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. ஒ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் நாட்டைக் கொளுத்துகிறார் என்கிறார். தினகரன் அலுவலகத்தைக் கொளுத்தியது யார்? அவர்களுக்கு, தற்போது 3 ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது. பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 1000 கொடுத்தோம். நலிவுற்ற விவசாயிகளுக்கு ரூ. 2000 கொடுத்தோம். உடனே தி.மு.க-வினர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நிறுத்திவிட்டார்கள். அம்மா கொடுத்ததைவிட நாங்கள் அதிகமாகக் கொடுப்பதால் ஸ்டாலினுக்கு தாங்க முடியவில்லை'' என்றார்.