Published:Updated:

கலாசார சீரழிவே பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் - அர்ஜுன் சம்பத் சாடல்

கலாசார சீரழிவே பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் - அர்ஜுன் சம்பத் சாடல்
கலாசார சீரழிவே பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் - அர்ஜுன் சம்பத் சாடல்
கலாசார சீரழிவே பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் - அர்ஜுன் சம்பத் சாடல்

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தன் கட்சி நிர்வாகிகளுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்குத் தேர்தல் பணி ஆற்றுவது தொடர்பான பயிற்சி கருத்தரங்கம் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாசுவி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

கருத்தரங்கை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், ``அரசு ஊழிய சங்கங்களான ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார்கள். இது தவறான செயல். மதுரை, கும்பகோணம் போன்ற வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. 

ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாகவும், ராகுல்காந்தி வேலையில்லா இளைஞர்களுக்கு வருடம் 70,000 ரூபாய் தருவதாக பொய்ப் பிரசாரங்கள் செய்து வருகிறார்கள். தேர்தல் ஆணையம் பொய்ப் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கும் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும். இந்த ஜனநாயக நாட்டை பணநாயக நாடாக மாற்ற நினைக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அதில் அரசியல் உள்ளீடு இருக்கிறது. ஆனால், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் மரண தண்டனையை எதிர்க்கக் கூடியவர்கள். தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலாசார சீரழிவே பொள்ளாச்சியில் பாலியல் வழக்குக்குக் காரணம். முதல்வர் மீது தி.மு.க கொலைப்பழி போட்டார்கள். ஆனால் அது பணம் கொடுத்து செட்டப் செய்தது என்று முதல்வர் அம்பலப்படுத்தினார். ஸ்டாலின் அநாகரிகமாகப் பேசி வருகிறார். அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.