Published:Updated:

சிறையில் பைண்டிங் வேலை செய்து தினமும் ரூ.25 சம்பளம் பெறும் சஞ்சய் தத்

Vikatan Correspondent
சிறையில் பைண்டிங் வேலை செய்து தினமும் ரூ.25 சம்பளம் பெறும் சஞ்சய் தத்
சிறையில் பைண்டிங் வேலை செய்து தினமும் ரூ.25 சம்பளம் பெறும் சஞ்சய் தத்
சிறையில் பைண்டிங் வேலை செய்து தினமும் ரூ.25 சம்பளம் பெறும் சஞ்சய் தத்

மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், புனே சிறையில் பேப்பர் பைண்டிங் மற்றும் செய்தித் தாள்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவருக்கு தினமும் 25 முதல் 40 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த பிரபல நடிகர் சஞ்சய் தத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கடந்த மார்ச் 21ஆம் தேதி உச்சநீதி மன்ற உறுதி செய்து தண்டனையை 5 ஆண்டாக குறைத்தது.

உச்சநீதி மன்ற உத்தரவையடுத்து அவர் சிறப்பு தடா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதன்பின்னர் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் புனே சிறைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது புனே சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சஞ்சய் தத்துக்கு அங்கே பைண்டிங் பணியும், செய்தித் தாள்களை அடுக்கி வைத்து பராமரிக்கும் பணியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தினமும் 25 முதல் 40 ரூபாய் வரை சம்பளமாக பெறுவதாக சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

##~~##
பாலிவுட் படங்களில், கோடிக்கணக்கில் சம்பளம் பெற்ற சஞ்சய் தத்தின் இந்தநிலை, அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, சஞ்சய் தத்திற்கு தினமும் வீட்டிலிருந்து உணவு வழங்கப்படுவதை எதிர்த்து சிறை அதிகாரிகள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.