`7 வாரிசுகளை களமிறக்கிய தி.மு.க., ரவீந்திரநாத்குமாரை விமர்சிப்பதா?’ - ஜி.கே வாசன் கேள்வி | GK Vasan campaign in theni

வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (06/04/2019)

கடைசி தொடர்பு:10:55 (06/04/2019)

`7 வாரிசுகளை களமிறக்கிய தி.மு.க., ரவீந்திரநாத்குமாரை விமர்சிப்பதா?’ - ஜி.கே வாசன் கேள்வி

தேனி நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பெரியகுளத்தில் நேற்று பிரசாரம் செய்தார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

வாசன்

ரவீந்திரநாத்குமார் மற்றும் பெரியகுளம் (தனி) அ.தி.மு.க வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை பிரசார வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக, பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள சவுராஸ்ட்ரா சத்திரம் பகுதியில் பிரசாரம் செய்தார் ஜி.கே.வாசன். அப்போது பேசியவர், ``முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கூடாது என்று கூறும் கேரள கம்யூனிஸ்ட் கட்சி உடன் தான் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.

தேனி பிரசாரம்

ஓ.பி.எஸ் தன் மகனைப் போட்டியிட வைத்துள்ளதாக தி.மு.க விமர்சனம் செய்கிறது. 40 நாடாளுமன்றத் தொகுதியில் 7 வாரிசுகளைப் போட்டியிட வைக்கும் தி.மு.க., ஓ.பி.எஸ் மகன் போட்டியிடுவதை விமர்சனம் செய்ய என்ன தகுதி உள்ளது. ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி என மூன்று தொகுதிகளில் ஏற்கெனவே தோல்வியுற்றவர்தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அவருக்கும் தேனிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தேனியில் அவருக்கு வடக்கும் தெரியாது தெற்கும் தெரியாது. சென்னையில் வசிக்கும் அவரை, எந்த முகாந்திரத்தில் காங்கிரஸ் கட்சி, தேனியில் போட்டியிட வைக்கிறது” எனப் பேசினார்.