Published:Updated:

அரசியலில் ரஜினி-கமல் நட்பு எப்படி இருக்கும்?- சத்யநாராயணா பதில்

தி.ஜெயப்பிரகாஷ்
அரசியலில் ரஜினி-கமல் நட்பு எப்படி இருக்கும்?- சத்யநாராயணா பதில்
அரசியலில் ரஜினி-கமல் நட்பு எப்படி இருக்கும்?- சத்யநாராயணா பதில்

``ரஜினிகாந்த் பா.ஜ.க-வின் திட்டங்களைத்தான் ஆதரித்தாரே தவிர, மோடிக்கு வாக்களிக்குமாறு எப்போதும் கூறவில்லை'' என ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்திருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம், சின்னாண்டிபாளையம் கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில். அங்கு நடைபெற்று வரும் சித்ரா பெளர்ணமி திருவிழாவில் இன்று நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்யநாராயணா கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார். அவரை அப்பகுதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மேளதாளங்களுடன் வரவேற்றார்கள். கோயிலுக்குள் நுழைந்த அவருக்குப் பூரண கும்ப மரியாதையுடன், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு கொடுத்தனர்.

சித்ரகுப்தரை தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சத்யநாராயணா, ``மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நல்ல திட்டங்களை மட்டுமே ரஜினிகாந்த் ஆதரித்தாரே தவிர, மக்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என எப்போதும் கூறவில்லை. வரும் மே 23-ம் தேதிக்குப் பிறகு ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருக்கும். அவர் சொன்னதுபோலவே அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிடுவார். அதேசமயம் திரைத்துறையில் இருப்பதைப்போன்றே, அரசியலிலும் ரஜினிகாந்த் - கமல்ஹாசனுக்கு இடையே நல்ல நட்பு இருக்கும். அந்த நட்பு இருவருக்குமிடையே ஆரோக்கியமான போட்டியாகவும் அமையும்'' எனத் தெரிவித்தார்.