Published:Updated:

`மம்தாவின் நட்பு, ஒபாமாவின் அந்த அறிவுரை!'- அக்‌ஷய் குமாருடன் நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த 21-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதில், `நான் இன்று எனக்குச் சம்பந்தமில்லாத ஒரு செயலைச் செய்தேன். இதுவரை இந்தச் செயலை நான் செய்ததில்லை. மிகவும் பதற்றமாக உள்ளது. மேலும் விவரங்களுக்குக் காத்திருங்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு அவரது ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

`மம்தாவின் நட்பு, ஒபாமாவின் அந்த அறிவுரை!'- அக்‌ஷய் குமாருடன் நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி

இதனையடுத்து நேற்று தான் இந்தியப் பிரதமர் மோடியை நேர்காணல் செய்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஏ.என்.ஐ ஊடகத்துக்குப் பிரதமர் அளித்திருந்த பேட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசியல் இல்லாத பிற பல கேள்விகளுக்கு மோடி பதிலளித்துள்ளார். 

`மம்தாவின் நட்பு, ஒபாமாவின் அந்த அறிவுரை!'- அக்‌ஷய் குமாருடன் நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி

அதில் பேசியுள்ள பிரதமர் மோடி, ``நான் பிரதமர் ஆவேன் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. சந்நியாசி ஆவேன் என்றுதான் நினைத்தேன். ஒரு சாதாரண மனிதர் அவ்வளவு பெரிய பதவியை யோசித்துப் பார்க்க முடியாது அல்லவா. ஒருவேளை நான் பிரதமர் ஆகாமல் எனக்குச் சாதாரண வேலை கிடைத்திருந்தால் என் தாய் ஊர் மக்களுக்கு லட்டு அளித்து கொண்டாடி இருப்பார். சிறுவயதில் இருக்கும் போது பல வீரர்கள் ராணுவத்தில் இணைவதை நான் பார்த்துள்ளேன். அவர்களின் தேச பக்தி எனக்கு ஒருவித உத்வேகத்தை அளித்தது. பிறகு நான் ராமகிருஷ்ணா மிஷனில் இணைந்தேன் அதைத் தொடர்ந்து சில காலம் நாடோடியாக வாழ்ந்தேன். எனக்குள் எழும் கேள்விகளுக்கான விடையைத் தேடி அலைந்தேன்.

`மம்தாவின் நட்பு, ஒபாமாவின் அந்த அறிவுரை!'- அக்‌ஷய் குமாருடன் நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி

அவ்வளவு எளிதாக எனக்குக் கோபம் வராது. ஆனால் அது மனித இயல்பு. இந்த உணர்வுகள் எதிர்மறை எண்ணங்களைப் பரப்பும். அலுவலக உதவியாளராக நான் பணியாற்றியது முதல் தற்போது வரை என் கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கோபத்துக்கும் கண்டிப்புக்கும் வித்தியாசம் உண்டு. எனக்கு கோபம், சந்தோசம், குழப்பம் போன்ற எதுவாக இருந்தாலும் அதை ஒரு கடிதத்தில் எழுதுவேன். பிறகு அது குறித்து ஆலோசிப்பேன். அதன்மூலம் என் தவறுகளுக்கு சரியான விடை கிடைக்கும். தற்போது அதற்கான நேரம் என்னிடம் இல்லை. பல சூழ்நிலைகளில் இப்படி எனக்கு நானே பயிற்சி அளித்துக்கொள்வேன். 

நான் பிரதமரான பிறகு என் தாயை என்னுடன் டெல்லியில் வந்து தங்கும்படி பலமுறை அழைத்தேன். ஆனால் அவர்களுக்கு அவரின் சொந்த கிராமத்தில் இருப்பதுதான் பிடித்துள்ளது எனக் கூறிவிட்டார். நான் ஒவ்வொரு முறையும் குஜராத் செல்லும் போது என் தாய் எனக்கு ரூபாய் வழங்குவார். இதை அவர் இன்னும் செய்துகொண்டிருக்கிறார்.

`மம்தாவின் நட்பு, ஒபாமாவின் அந்த அறிவுரை!'- அக்‌ஷய் குமாருடன் நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி

ஒரு நாளில் மூன்று முதல் நான்கு மணிநேரம் வரை நான் தூங்குவேன். 2015-ம் ஆண்டு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமாவைச் சந்தித்த போது. அவர் எனக்கு ஒரு அறிவுரை வழங்கினார். அது ஒரு நாளுக்குக் குறைந்தது 7 மணிநேரமாவது தூங்க வேண்டும். நீங்கள் இப்படி தூங்காமல் இருக்கக்கூடாது கட்டாயம் ஓய்வெடுங்கள் எனக் கூறினார். மீம்ஸ்கள் ஒரு சாதாரண மனிதனுக்குள் இருக்கும் ஆக்க திறனை மட்டுமே வெளிப்படுத்துகின்றன’ என அரசியல் அல்லாத மற்ற விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

இதில் முக்கியமாக, இந்திய அரசியலில் தற்போது கீரியும் பாம்பும் யாரென்று கேட்டால் பிரதமர் மோடியையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சொல்லலாம். அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் இந்த இருவரும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நட்பும் அன்பும் கொண்டவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதைப் பிரதமர் மோடியே இந்தப் பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். 'நான் பெங்காலி ஸ்வீட்டுகளை விரும்பிச் சாப்பிடுவேன் என்று திதிக்கு தெரியும். அதனால், ஒவ்வொரு ஆண்டும் திதியிடமிருந்து எனக்கு பெங்காலி ஸ்வீட்டுகளும் அழகிய குர்தா செட்டுகளும் பரிசாக  வந்துவிடும். எனக்கான குர்தா செட்டுகளை கூடத் திதியே தேர்வு செய்து அனுப்பி வைப்பார்' என்று நெகிழ்ந்துள்ளார்.

மேலும், `தன் இளவயது வாழ்க்கை குறித்து மோடி, இள வயதிலேயே அனைத்தையும் துறந்து விட்டேன். என் தாயார் கூட அவருக்காக நான் நேரம் செலவழிப்பதை விரும்பமாட்டார். இப்போது, எனக்கு எந்தப் பற்றும் அல்ல'' என்று மோடி கூறினார்.
 
News & Photo Credits : ANI

அடுத்த கட்டுரைக்கு