Published:Updated:

`அரசியல் சார்புடையவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கக் கூடாது!' - அர்ஜூன் சம்பத்

இ.கார்த்திகேயன்
`அரசியல் சார்புடையவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கக் கூடாது!' - அர்ஜூன் சம்பத்
`அரசியல் சார்புடையவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கக் கூடாது!' - அர்ஜூன் சம்பத்

`நீதிமன்றங்களில் அரசியல் சார்புடையவர்களை அரசு வழக்கறிஞர்களாகவோ, நீதிபதிகளாகவோ நியமிக்கக் கூடாது. தனித்தேர்வு மூலம் நீதிபதிகளைத் தேர்வு செய்ய வேண்டும்" என இந்துமக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

`அரசியல் சார்புடையவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கக் கூடாது!' - அர்ஜூன் சம்பத்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குடும்பத்துடன் வந்தார். கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் கோயிலில் கிரி பிரகாரம் இடிந்து விழுந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் அதை புதிதாகக் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மண்டபம் கட்டிட அறநிலையத்துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க., ஆட்சியும் தமிழகத்தில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இணைந்த அ.தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும் எனக் கோயிலில் வழிபாடு செய்தேன். இத்தேர்தலில் தி.மு.க., சாதி மத உணர்வுகளை தூண்டி சட்டத்திற்குப் புறம்பாக ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டே செயல்படுகிறார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன்.

கள்ளக்காதல் போன்ற விவகாரங்களில் பெண்களை காக்க இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். மும்பை, கோவையில் நடந்த குண்டுவெடிப்பு பாணியிலேயேதான் இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதாவது பைப் வெடிகுண்டு உள்ளிட்ட முறைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதற்கு காரணம் ஐ.எஸ்.ஐ.எஸ். தான்.

`அரசியல் சார்புடையவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கக் கூடாது!' - அர்ஜூன் சம்பத்

தமிழகத்திற்குள் கடல்வழியாக தீவிரவாதிகள் நுழைவதற்கு திட்டமிட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் இதே போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போர்க்கால நடவடிக்கைகள் தேவை. தமிழகத்தில் வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பில் பல்வேறு குறைப்பாடுகள் உள்ளன. இதைத் தடுக்க கோயில்களில் பாதுகாப்பிற்கு என்றே தனிப் பாதுகாப்பு படையை உருவாக்க வேண்டும். 

நீதித் துறையிலும் நக்சல்களின் கைககள் உள்ளன. அரசியல் சார்ந்த வக்கீல்களை அரசு வக்கீலாக நியமனம் செய்யும் போது, பின்னாளில் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டு சுப்ரீம் கோர்ட் வரை நீதிபதிகளாக வருகின்றனர். எனவே, அரசியல் சார்புடையவர்களை நீதித் துறையில் அரசு வக்கீல்களாகவோ, நீதிபதிகளாகவோ நியமனம் செய்யக் கூடாது. நீதிபதிகளை தேர்வு செய்ய தனித்தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்.

தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சியையும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும் விரும்பாத நக்சல் மற்றும் மிஷனரிகளே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு காரணம். அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைந்துதான் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையை நிகழ்த்தின. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மருத்துவ சேவை, கல்வி சேவை வழங்கி வந்தனர். எனவே, இந்த ஆலையை தமிழக அரசு மீண்டும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்றுதான் ஆலையை நடத்திவந்தார்கள். சுற்றுச்சூழல் குறைபாடு என்றால் துறை ரீதியாக விளக்கம் கேட்டு அதைச் சரி செய்ய வேண்டும்" என்றார்.