Published:Updated:

பின்னடைவுகளால் சோர்வடையாத சரிதா நாயர்!- அமேதியில் பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கீடு!

பி.ஆண்டனிராஜ்
பின்னடைவுகளால் சோர்வடையாத சரிதா நாயர்!- அமேதியில் பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கீடு!
பின்னடைவுகளால் சோர்வடையாத சரிதா நாயர்!- அமேதியில் பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கீடு!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் சோலார் பேனல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான சரிதா நாயர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அவருக்கு தேர்தல் ஆணையத்தால் பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னடைவுகளால் சோர்வடையாத சரிதா நாயர்!- அமேதியில் பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கீடு!

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின்சக்திக்கான தகடுகள் அமைத்துக் கொடுப்பதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரில் சரிதா நாயர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சரிதா நாயர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அப்போதைய முதல்வரான உம்மன்சாண்டி, அமைச்சர் ஹபி ஈடன் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். இந்த விவகாரம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோலார் பேனல் மோசடி தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பின்னடைவுகளால் சோர்வடையாத சரிதா நாயர்!- அமேதியில் பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கீடு!

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில், தன்னை சோலார் பேனல் வழக்கில் சிக்க வைத்த முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகப் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த சரிதா நாயர், எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஹிபி ஈடனை எதித்துக் களம் இறங்க முடிவு செய்தார். அதனால் எர்ணாகுளம் தொகுதியில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தார். 

அத்துடன் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால் அந்தத் தொகுதியிலும் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் குறித்து கட்சித் தலைமையிடம் பலமுறை புகார் அளித்தும் ராகுல் காந்தி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதாக சரிதா நாயர் அறிவித்தார். ஆனால், வேட்புமனு பரிசீலனையின்போது, நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எர்ணாகுளம் தொகுதியிலும் சரிதா நாயர் மனு நிராகரிக்கப்பட்டது.

பின்னடைவுகளால் சோர்வடையாத சரிதா நாயர்!- அமேதியில் பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கீடு!

பின்னடைவுகளால் சோர்வடையாத சரிதா நாயர், காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவுடன் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்திருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள மலையின்கீழு பகுதியின் விளவூர்க்கல் என்ற இடத்தில் குடியிருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வேட்புமனு பரிசீலனையின்போது, அவருடைய மனு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் ராகுலை எதிர்த்து அவர் சுயேச்சையாகக் களம் காண்கிறார். இந்த நிலையில், அவருக்கு பச்சை மிளகாய் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அமேதி தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள சரிதா நாயர், அதற்கான பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் போட்டியிடுவதால் ராகுலுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் சரிதா நாயர் நம்பிக்கை தெரிவித்தார்.

Vikatan