Published:Updated:

காந்தியும் கோகலேயும்... அந்த இரண்டு சம்பவங்கள்! #RememberingGokhale

காந்தியும் கோகலேயும்... அந்த இரண்டு சம்பவங்கள்! #RememberingGokhale

காந்தியின் கொள்கைகள்தான் இந்தியாவைக் கட்டமைத்தன. ஆனால், காந்தியைக் கட்டமைத்ததில் கோகலேவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், சமகால இந்தியாவில் காந்தி, கோகலே போன்ற தலைவர்களின் தியாகங்கள் மக்களிடையே மறந்துபோகத் தொடங்கியுள்ளன.

காந்தியும் கோகலேயும்... அந்த இரண்டு சம்பவங்கள்! #RememberingGokhale

காந்தியின் கொள்கைகள்தான் இந்தியாவைக் கட்டமைத்தன. ஆனால், காந்தியைக் கட்டமைத்ததில் கோகலேவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், சமகால இந்தியாவில் காந்தி, கோகலே போன்ற தலைவர்களின் தியாகங்கள் மக்களிடையே மறந்துபோகத் தொடங்கியுள்ளன.

Published:Updated:
காந்தியும் கோகலேயும்... அந்த இரண்டு சம்பவங்கள்! #RememberingGokhale

து ஓர் அடிமைக்காலம். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா ஆங்கிலேயரின் வணிகப்பொம்மையாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அடிமை விலங்கை உடைத்தெறிய உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளும் விடுதலை வேட்கையோடு சுயராஜ்யத்தை நோக்கி நடைபோட முயன்றன. இந்தியாவிலும் சுதந்திரப் போராட்ட உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன. மகாத்மா காந்தி விடுத்த சுதந்திரப் போராட்டத்துக்கான அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் சுயம் துறந்து, சுதந்திரவேட்கையில் தங்களை அர்ப்பணித்தனர். அப்படி காந்தியின் அழைப்பை ஏற்று கிளர்த்தெழுந்தவர்கள்தான் காந்திக்குப் பிறகான இந்தியாவை, அவருடைய வழியில் கட்டியெழுப்பிய நேரு, காமராஜர் உள்ளிட்டோர். ஆனால், அப்பேற்பட்ட காந்தியையே கவர்ந்திழுத்த தலைவர் ஒருவர் இருக்கிறார், அவர்தான் கோகலே.

சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸ் வரலாற்றின் முக்கியமான நிகழ்வு சூரத் பிளவு. மிதவாதிகள், தீவிரவாதிகள் எனக் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த நிகழ்வு அது. அந்தப் பிளவில் மிதவாதிகளின் தலைவராக முன்னிறுத்தப்பட்டவர் கோபால கிருஷ்ண கோகலே. தன் வாழ்வின் முக்கியமான தருணங்களில் கோகலேவுடன் காந்தி செலவழித்த பொழுதுகளும் உண்டு. காந்தி தன்னுடைய சத்தியசோதனையில் அதிகம் பேசியுள்ள பெயர்களில் ஒன்று கோகலே என்பதுதான். கிட்டத்தட்ட ஐந்து அத்தியாயங்களுக்கும் மேல் கோகலே தொடர்பான தலைப்புகளை அமைத்துள்ளார்.

காந்தியும் கோகலேயும்... அந்த இரண்டு சம்பவங்கள்! #RememberingGokhale

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மாபெரும் ஆயுதம் என்பது காந்தியின் உரையாடல்கள்தான். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் உலகின் பல நாடுகளும் ஆயுதங்களை நம்பி சுதந்திரப் போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், காந்தி தன்னுடைய அகிம்சை என்னும் ஆயுதத்தின் வாயிலாக மிகப்பெரிய உரையாடலை நிகழ்த்தினார். ஒருகட்டத்தில் காந்தியின் பேச்சுகளைக் கேட்க, லட்சக்கணக்கானோர் கூடுவது இயல்பான நிகழ்வாக மாறியது.

ஆனால், காந்திக்கு மிகவும் பிடித்த உரையாடல் கோகலேவுடையது. சில நேரங்களில் கோகலே யாருடனாவது உரையாடும்போது, உரையாடலை நிறுத்திவிடக் கூடாது என எண்ணியபடியே அருகில் அமர்ந்திருப்பார் காந்தி. இதுகுறித்து சத்தியசோதனையில் குறிப்பிடும்போது, “கோகலே, டாக்டர் ராயினுடைய சம்பாஷனைகளை எவ்வளவு நேரம் கேட்டுக்கொண்டிருந்தாலும் எனக்கு அலுப்பு ஏற்பட்டதில்லை. இன்னும் சிறிது நேரம் பேச மாட்டார்களா எனத்தான் தோன்றும்” எனப் பதிவுசெய்துள்ளார்.  

காந்தி - கோகலேக்கு இடையே நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டு சம்பவங்களும் பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அவை இன்றைய சூழலில் கட்சிகளின் தலைமைகளும் தொண்டர்களும் அறிந்துகொள்ள வேண்டியவை. இந்த இரண்டு நிகழ்வுகளையும் சத்தியசோதனையில் பதிவு செய்துள்ளார் காந்தி.

கோகலே சொந்தமாகக் குதிரை வண்டி வைத்திருந்தார். தன்னுடைய பயணங்களுக்கு அந்த வண்டியைப் பயன்படுத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை “ஏன் நீங்கள் டிராம் வண்டியில் போய்வரக் கூடாது? அதனால், தலைவருடைய கௌரவத்துக்குக் குறைவு நேர்ந்துவிடுமா?" எனக் கோகலேவிடம் கேட்டுவிட்டார் காந்தி.

காந்தியும் கோகலேயும்... அந்த இரண்டு சம்பவங்கள்! #RememberingGokhale

“நீங்கள்கூட என்னைப் புரிந்துகொள்ளவில்லை பார்த்தீர்களா? எனக்குக் கிடைக்கும் சட்டசபை படியைக்கூட என் சொந்த சௌகரியத்துக்காக நான் பயன்படுத்துவதில்லை. நீங்கள் டிராம் வண்டியில் பயணிப்பதையே நான் பொறாமையாகதான் பார்க்கிறேன். ஆனால், என்னால் அது முடியாது. காரணம், நான் என்ன செய்தாலும் அது செய்தி ஆகிவிடுகிறது. கூட்டம் கூடிவிடுகிறது. ஒருவேளை நீங்களும் என் அளவிற்குப் புகழ் அடையும்போது அது உங்களுக்குப் புரியலாம். தலைவர்கள் செய்வதை எல்லாம் சௌகரியத்துக்கு செய்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். என்னால் முடிந்தவரை எளிய வாழ்வையே நானும் கடைப்பிடிக்கிறேன்” எனப் பதிலளித்தார் கோகலே. தலைவர்களை நோக்கித் தைரியமாகக் கேள்விகேட்கும் தொண்டர்களும் அவற்றுக்கு நிதானமாகப் பதிலளிக்கும் தலைவர்களும் சமீபத்தில் குறைந்து வருகின்றனர். பொதுவெளிகளில் ஜனநாயகம் பற்றிப் பேசும் கட்சிகளும்கூட உட்கட்சி ஜனநாயகத்தை மறந்துவிடுகின்றன.

மற்றொரு நிகழ்வு, காந்தியின் உணவுப் பழக்கத்தோடு தொடர்புடையது. காந்தி தன் வாழ்நாள் முழுவதும் உணவுமுறையில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டவர். மாமிசம் உண்பதை முற்றிலுமாகத் தவிர்த்தவர். பிற்காலத்தில் பழ வகைகளையும்  கொட்டை வகைகளையும் மட்டும் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இங்கிலாந்தில் தங்கியிருந்த சமயம் நோய்வாய்ப்பட்டிருந்த காந்தி, மருத்துவர் ஜீவராஜ் மேதாவிடம் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலனைக் கருத்தில்கொண்டு பால் மற்றும் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால், அதை மறுத்தார் காந்தி. அப்போது காந்தியை நேரில் சந்தித்து வற்புறுத்தினார் கோகலே. ஆனால், இதுகுறித்து முடிவெடுக்க 24 மணிநேரம் அவகாசம் கேட்டார் காந்தி. அதன் பிறகு, “இந்த விஷயத்தில் என் கொள்கைகளை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை” எனப் பதிலளித்தார் காந்தி. “இனி அவரை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். அவருக்கு ஏற்ற மாதிரி மருத்துவங்களை வழங்குகள்” என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கிச் சென்றார் கோகலே. காந்தியின் கொள்கை உறுதி ஒருபுறமிருக்க, அதைவிட மேலானது கோகலேவின் தலைமைப் பண்பு.

காந்தியின் கொள்கைகள்தான் இந்தியாவைக் கட்டமைத்தன. ஆனால், காந்தியைக் கட்டமைத்ததில் கோகலேவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், சமகால இந்தியாவில் காந்தி, கோகலே போன்ற தலைவர்களின் தியாகங்கள் மக்களிடையே மறந்துபோகத் தொடங்கியுள்ளன.

கோபாலகிருஷ்ண கோகலேயின் பிறந்த நாளில், அவரின் நினைவுகளைப் போற்றுவோம்!