Published:Updated:

``பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து வரலாறு படைத்தது தி.மு.க-தான்” - நடிகை விந்தியா

இ.கார்த்திகேயன்
``பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து வரலாறு படைத்தது தி.மு.க-தான்” - நடிகை விந்தியா
``பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து வரலாறு படைத்தது தி.மு.க-தான்” - நடிகை விந்தியா

``ஊழலின் மொத்த உருவமே தி.மு.க-தான். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனப் பஞ்சபூதங்களிலும் ஊழல்செய்து வரலாறு படைத்தவர்கள் தி.மு.க-வினர்தான்” என அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார். 

``பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து வரலாறு படைத்தது தி.மு.க-தான்” - நடிகை விந்தியா

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் மோகனை ஆதரித்து, நடிகை விந்தியா ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாளமுத்துநகர், மாப்பிள்ளையூரணி, ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ”சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அழிக்கமுடியாத ஊர், தூத்துக்குடி. இந்தத் தேர்தல், அராஜக தி.மு.க-விற்கும் மக்களாட்சிக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்.  இந்த மண்ணில் மக்களுக்காக உழைப்பவர் மட்டுமே வெற்றிபெற முடியும்.

தேர்தல் சமயத்தில் பொள்ளாச்சி பிரச்னை குறித்துப் பேசி, பெண்கள் மீது அக்கறை இருப்பதுபோல முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். தேர்தல் வந்தால் மட்டும் தி.மு.க மதவெறி இல்லாத கட்சியாக மாறிவிடுகிறது. பெண்கள்மீது அக்கறை உள்ள கட்சியாக மாறி விடுகிறது. கிராமங்களுக்குச் சென்று கூட்டம் நடத்துகிறார்கள். இந்த நாடகத்தை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள்.

``பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து வரலாறு படைத்தது தி.மு.க-தான்” - நடிகை விந்தியா

சக்திமானை நம்பி மாடியில் இருந்து குதிப்பது என்பதும், ராகுல் காந்தி பிரதமராக இருந்து இந்தியாவை காப்பார் என்று நினைப்பதும் ஒன்றுதான். ஊழல்குறித்து பேசுவதற்கு அ.தி.மு.க-வுக்கு அருகதை இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். நாம் ஏன் பேச வேண்டும், ஊழலின் மொத்த உருவமே தி.மு.க-தான். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களிலும் ஊழல்செய்து வரலாறு படைத்தவர்கள் தி.மு.க-வினர்‌தான்.

நன்றி என்றால் என்ன என்பது தெரியாதவர் தினகரன்.  உப்பு போட்ட வீட்டுக்கே துரோகம் நினைக்கிற அவரும், ஒருநாளும் ஜெயிக்கப் போவதில்லை. இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் சிறந்த காமெடியன் தினகரன்தான். பதவிக்காகவும், ஊழலுக்கும் தன் சொந்த குடும்பத்திற்காகவும் தி.மு.க, காங்கிரஸுடன் கைகோத்து, ஒரு தமிழ் இனத்தையே அழித்த நாள் மே18. அவர்களுக்கு, மே 23-ல் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” என்றார்.

Vikatan