Published:Updated:

`அவர் செய்ததற்கு என்னைத் திட்டுகிறார்கள்’- உருவ ஒற்றுமையால் மோடி லுக்அலைக் படும்பாடு

`அவர் செய்ததற்கு என்னைத் திட்டுகிறார்கள்’- உருவ ஒற்றுமையால் மோடி லுக்அலைக் படும்பாடு
`அவர் செய்ததற்கு என்னைத் திட்டுகிறார்கள்’- உருவ ஒற்றுமையால் மோடி லுக்அலைக் படும்பாடு

இந்தியப் பிரதமர் மோடிக்கு எனத் தனிப்பட்ட சில அடையாளங்கள் இருக்கும். அதாவது, அவருடைய வெள்ளை நிற தலை முடி, தாடி ஸ்டைல், நீளமான குர்தா அதற்கு மேல் கையில்லாமல் ஒரு சட்டை, இறுக்கமான பேன்ட், சூ என இவை அனைத்தையும் வைத்து மோடியை எளிதாக அடையாளம் காணலாம். இதை அப்படியே பின் தொடரும் ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ளார். அவர் மோடியின் உடைகளை மட்டுமல்லாது அவரைப் போல உருவ அமைப்பையும் பெற்றுள்ளார்.

`அவர் செய்ததற்கு என்னைத் திட்டுகிறார்கள்’- உருவ ஒற்றுமையால் மோடி லுக்அலைக் படும்பாடு

58 வயதான அபிநந்தன் பதக் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வாழ்ந்து வருகிறார். அவர் பார்ப்பதற்கு அப்படியே இந்தியப் பிரதமர் மோடியைப் போல இருக்கிறார். கிட்டத்தட்ட மோடியின் அதே உயரமும், உடல்வாகு, நடை இவை அனைத்தையும் கொண்டுள்ளார். நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் இருக்கும் பகுதியில் அபிநந்தன் செம ஃபேமஸ். 

`அவர் செய்ததற்கு என்னைத் திட்டுகிறார்கள்’- உருவ ஒற்றுமையால் மோடி லுக்அலைக் படும்பாடு

மோடியைப் போன்ற உருவ ஒற்றுமை குறித்துப் பேசிய அபிநந்தன் பதக், ``இந்திய பிரதமர் மோடியைப் போல் நான் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 2014-ம் ஆண்டு நான் பா.ஜ.க-வுக்கும், மோடிக்கும் ஆதரவு அளித்தேன். ஆனால், அப்போது சொன்ன வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்பதால் அவரின் கட்சியை எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்தேன். நான் மோடியைப் போலவே உள்ளதால் செல்லும் இடமெல்லாம் மக்கள் என் அருகில் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்வர். என்னிடம் அன்பாகப் பேசுவார்கள். நான்தான் உண்மையான மோடி என நினைத்தவர்களும் உண்டு.

`அவர் செய்ததற்கு என்னைத் திட்டுகிறார்கள்’- உருவ ஒற்றுமையால் மோடி லுக்அலைக் படும்பாடு

அதே நேரத்தில் சிலர் என்னைக் கடுமையாகத் திட்டியதும் உண்டு. நான்தான் மோடி என நினைத்து அவர் அளித்த வாக்குறுதிகளைக் கூறி என்னை விமர்சிப்பார்கள். நீங்கள் கூறிய நல்ல நாள் எப்போது வரும் என என்னைப் பார்த்துக் கேட்பார்கள். எனக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியாது. எதற்காகவும் நான் என் உருவத்தை மாற்றிக்கொள்ள முடியாது. குர்தாவும், தாடியும் எனக்கு நிறைய பிடிக்கும். நான் 1990-களில் இருந்து அரசியலில் உள்ளேன். நான்தான் ஒரிஜினல். மோடிதான் என்னைப் போல உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Vikatan