Published:Updated:

`வாழ்வைப் பார்க்காமல் வரலாற்றைப் பாதுகாத்து என்ன பயன்?' - தமிழக அரசுக்கு முத்தரசன் கேள்வி

`வாழ்வைப் பார்க்காமல் வரலாற்றைப் பாதுகாத்து என்ன பயன்?' - தமிழக அரசுக்கு முத்தரசன் கேள்வி
`வாழ்வைப் பார்க்காமல் வரலாற்றைப் பாதுகாத்து என்ன பயன்?' - தமிழக அரசுக்கு முத்தரசன் கேள்வி

`வாழ்வைப் பார்க்காமல் வரலாற்றைப் பாதுகாத்து என்ன பயன்?' - தமிழக அரசுக்கு முத்தரசன் கேள்வி

ஹைட்ரோகார்பன் எனும் பேராபத்து மீண்டும் டெல்டா பகுதியை அழிக்கும் வகையில் உருவெடுத்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அப்படி இருந்தும் இன்றைய சூழலில் அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. விவசாயம்தான் டெல்டாவின் அடையாளம் இதை ஏன் அழிக்க அரசு நினைக்கின்றது என்று தெரியவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசு மௌனம் சாதிப்பது ஏனென்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

`வாழ்வைப் பார்க்காமல் வரலாற்றைப் பாதுகாத்து என்ன பயன்?' - தமிழக அரசுக்கு முத்தரசன் கேள்வி

முத்தரசன் திருவாரூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது, ``தமிழகத்தின் பொன் விளையும் பூமி எனப் போற்றப்படும் காவிரி டெல்டா இயற்கையின் சீற்றத்தால் அழிவதோடு, மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளால்தான் அதிகம் அழிந்து வருகிறது. மத்திய அரசு தற்போது விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 274 இடங்களில் மிகப் பெரிய கிணறுகள் அமைத்து ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கி இருப்பது விவசாயிகளிடையே கவலையை அதிகரிக்க வைத்துள்ளது. ஏற்கெனவே இத்திட்டத்தை எதிர்த்து விசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டனர். அரசு நடத்திய பேச்சுவார்த்தையின்பேரில் தற்காலிகமாகப் போராட்டங்களை நிறுத்தியிருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு பொதுப் பிரச்னையாக இதை அணுகி வருகிறது.

வானம்பார்த்து மழையும் பொய்த்துப்போன நிலையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும். எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய போராட்டக் குழுக்களை கிராமம்தோறும் அமைத்து வருகின்றன. தற்போது போராட்டங்களும் ஆங்காங்கே தொடங்கியுள்ளன. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் போராட்டம் இன்னும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அமைச்சர்கள் இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் காப்பதன் மூலம் இந்த ஆட்சியாளர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களோ என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

`வாழ்வைப் பார்க்காமல் வரலாற்றைப் பாதுகாத்து என்ன பயன்?' - தமிழக அரசுக்கு முத்தரசன் கேள்வி

எனவே, இத்திட்டத்தை எதிர்த்து வலிமையான போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த உள்ளது. மத்திய அரசு இரக்கமற்ற அரசாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து அரசாகச் செயல்படுகிறது தமிழகத்தை மத்திய மோடி அரசு வெறுப்பான மனநிலையிலேயே பார்க்கிறது. அதன் காரணமாகவே தமிழகத்தின் மக்கள் விரும்பாத திட்டங்களைத் திணிக்க நினைக்கின்றது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்பட்டு அங்கு நடந்த அசம்பாவிதம்போல ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் காவிரி டெல்டாவில் நடக்க வேண்டுமென எதிர்பார்க்கிறதோ என்கின்ற சந்தேகம் எழுகின்றது. ஜூன் 12 நெருங்கிவிட்ட நிலையில் சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க வேண்டிய நிலையில் அணையில் குறைந்த அளவு நீர் மட்டுமே உள்ளது எனவே, காவிரி நதிநீர் ஆணையம் கூட்டம் இன்னும் கூட்டப்படாமல் உள்ளது. அந்த ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை. மாநில அரசும் இது குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்கிறது. நெருங்கிவிட்ட நிலையிலும் தூர்வாரும் பணிகள் இன்னும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கிராமம்தோறும் குழுக்கள் அமைத்துத் தூர்வாரும் பணிகளைச் செய்ய பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கவலை அளிப்பதாக உள்ளது. மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் கமல்ஹாசன் பேசியதெல்லாம் இப்போது ஒரு மிகப்பெரிய பிரச்னை அல்ல. காந்தியைச் சுட்டுக் கொன்றது சரியா எனப் பேசுகின்ற அளவுக்குப் பா.ஜ.க சென்றுவிட்ட நிலையில் அதற்கு ஒரு சில அ.தி.மு.க அமைச்சர்களும் துணை போகிறார்கள். காந்தியைக் காட்டி கோட்சேவை உயர்த்திப் பிடிக்க பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் துணிந்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் வாழ்வைப் பார்க்காமல் வரலாற்றை மட்டும் பாதுகாத்து என்ன பயன். வருங்காலத்தில் தமிழ்நாடு என்ற மாநிலம் இருந்ததாக மட்டுமே வரலாறு அமைந்திடாமல் இருக்க வேண்டும். நம்மை வாழவைக்கும் பூமியைப் பாதுகாப்பதில் நமது போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்" என்றார் 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு