Published:Updated:

`இந்திராவைப்போல் நானும் கொல்லப்படுவேன்' - அரவிந்த் கெஜ்ரிவால்

`இந்திராவைப்போல் நானும் கொல்லப்படுவேன்' - அரவிந்த் கெஜ்ரிவால்
`இந்திராவைப்போல் நானும் கொல்லப்படுவேன்' - அரவிந்த் கெஜ்ரிவால்

இந்திரா காந்தியைப்போல் நானும் கொல்லப்படுவேன் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

`இந்திராவைப்போல் நானும் கொல்லப்படுவேன்' - அரவிந்த் கெஜ்ரிவால்

நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப்பில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. தேர்தல் பிரசாரத்துக்காக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் சென்றுள்ளார். பிரசாரத்துக்குப் பின்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியைப் போன்று நானும் ஒரு நாள் கொல்லப்படுவேன். என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் மூலமே என்னை கொல்வதற்கு பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகள் மூலமே என்னுடைய அறிக்கைகள் பல பா.ஜ.க வசம் செல்கிறது. எனக் குற்றம்சாட்டினார்.

இம்மாதம் 4-ம் தேதி டெல்லியின் மோதி நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கெஜ்ரிவால் கன்னத்தில் இளைஞர் ஒருவர் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்திய காவல்துறையினர், அந்த நபர் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தொண்டர் என்றும். கட்சியின் மீது இருந்த அதிருப்தியில் அவர் அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறினர்.

இதுகுறித்து பேசிய கெஜ்ரிவால், என்னை ஒரு நாள் பா.ஜ.க-வினர் கொலை செய்துவிடுவார்கள் அதையும் கட்சியின் மீது இருந்த அதிருப்தியில் இப்படிச் செய்துவிட்டார் எனப் போலீஸார் கூறமுடியுமா. காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியடைந்த தொண்டர் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மீது தாக்குதல் நடத்த முடியுமா, பா.ஜ.க மீது அதிருப்தியடைந்த தொண்டர் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.


அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பைத்தான் வழங்கி வருகிறோம். காவலர்கள் தங்களது கடமை தவறாமல் அர்ப்பணிப்போடுதான் பணி செய்கிறார்கள். எங்களது பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை' எனத் தெரிவித்தனர்.

Vikatan