Published:Updated:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை!
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து நபர்களில் ஒருவரான சபரிராஜன் வீட்டில், இன்று சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐந்துபேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, கொடுத்த புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் முதன் முதலில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி புகார் கொடுத்த பெண்ணின் அண்ணன் தாக்கப்பட்டார். அதற்கும் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தது பொள்ளாச்சி போலீஸ்.  

அந்த வழக்கில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த பார் நாகராஜ் குற்றம் சாட்டப்பட்டிருந்ததால், இதில் அ.தி.மு.க புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி சர்ச்சை வெடித்தது. இன்னொரு தரப்பினர் இதில் தி.மு.க புள்ளிகளின் வாரிசுகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டியது. இதனால் எழுந்த மக்கள் கொந்தளிப்பை கட்டுக்குள் கொண்டுவர, மார்ச் மாதம் 12-ம் தேதி இந்த வழக்கு உடனடியாக சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு மாற்றப்பட்டது. கோவையின் அப்போதைய எஸ்.பி பாண்டியராஜன் கொடுத்த பேட்டி அரசுக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கவே... சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட  மறுநாளே இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்தது தமிழக அரசு. (அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டு அரசாங்கம் காட்டிய அலட்சியம் தனிக்கதை) 

தமிழக அரசு பரிந்துரை செய்தபோதும், வழக்கை விசாரணைக்கு எடுக்காமல் தாமதித்து வந்த சி.பி.ஐ கடந்த ஏப்ரல் 27-ம் தேதி, இந்த வழக்கை கையிலெடுத்து ரகசியமாக விசாரணையைத் தொடங்கியது. சி.பி.ஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைமணி தலைமையில், பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் சி.பி.ஐ போலீஸார். குறிப்பாக இதுதொடர்பாக வெளியான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை ஆய்வு செய்யும் பணியிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்வதிலும் சி.பி.ஐ தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.   

இந்த வழக்கில்,  திருநாவுக்கரசுதான் முக்கியக் குற்றவாளி என்று கருதப்படுவதால் திருநாவுக்கரசு பற்றிய விவரங்களை முதலில் சேகரிக்க ஆரம்பித்தது சி.பி.ஐ. இதற்காக, கடந்த 14-ம் தேதி சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுவின் வீட்டில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர், அப்போது கிராமத்தில் உள்ள பொதுமக்களிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் உள்ள மற்றொரு குற்றவாளியான ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ அதிகாரி கருணாநிதி உள்ளிட்ட  இரண்டு பேர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த சபரிராஜனின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த விசாரணைக்குப் பிறகு சி.பி.ஐ போலீஸார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஐந்து பேரிடமும் அவ்வப்போது விசாரணை செய்கிறது சி.பி.ஐ போலீஸ்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு