Published:Updated:

தி.மு.க. செயலாளர்களின் 'ராசி' நம்பர் நிதி!

தி.மு.க. செயலாளர்களின் 'ராசி' நம்பர் நிதி!
தி.மு.க. செயலாளர்களின் 'ராசி' நம்பர் நிதி!

திண்டுக்கல்: தற்போது மாவட்டம் வாரியாக தி.மு.க. நிதியளிப்பு கூட்டம் நடத்தி நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. அப்படி நிதி அளிக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தங்களின் ராசி நம்பர்லேயே நிதி வழங்கி வருகின்றனர்.

தி.மு.க. செயலாளர்களின் 'ராசி' நம்பர் நிதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் நடைபெற்றது. அப்போது தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினிடம் மாவட்ட கழகம் சார்பில் 6 கோடியே ஒரு லட்ச ரூபாயை நிதியாக வழங்கினார், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி.

தி.மு.க. செயலாளர்களின் 'ராசி' நம்பர் நிதி!

அப்போது பேசிய திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஐ.பெரிசாமி, ‘‘தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி, 5 கோடியே 22 லட்ச ரூபாய் தேர்தல் நிதியாக கொடுத்திருக்கிறார். அப்போது, 'ரவுண்டாக 5 கோடி, இல்லாவிட்டால் 6 கோடி கொடுக்க வேண்டியதுதானே’ என தளபதி கேட்டிருக்கிறார். அதற்கு, 'என்னோட ராசி நம்பர் ஒன்பது. அதனால தான் 5+2+2 வர்ற மாதிரி கொடுத்தேன்' என தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி பதிலளித்து இருக்கிறார்.

##~~##
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அன்பழகமும், அவரு ராசி நம்பர் 7 எனக் கூறி, அதன்படி ஒரு தொகையை கொடுத்திருக்கிறார். இப்படி எல்லா மாவட்டத்துலயும் ராசிப்படி தொகையை கொடுக்குறாங்க. எங்க மாவட்டத்தில் 6 கோடியே ஒரு லட்ச ரூபாய் கொடுக்குறோம். இது ராசிக்காக இல்ல. ஆறும், ஒன்னும் ஏழு. இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் தி.மு.க. இருக்கணும். அதுக்காகத் தான் கொடுக்குறேன்’’ என்றார் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஐ.பெரியசாமி.
'இவரோடு ராசி நம்பர் 7. அதனாலதான் இவரும் நம்பர் ஏழு வருமாறு தேர்தல் நிதி அளித்திருக்கிறார்' என்கின்றனர் திண்டுக்கல் தி.மு.க.வினர்.
-ஆர்.குமரேசன்
படங்கள்:
வீ. சிவக்குமார்.