Published:Updated:

11 டாக்டர்களுக்கு மருத்துவம் பார்க்க தடை

விகடன் விமர்சனக்குழு
11 டாக்டர்களுக்கு மருத்துவம் பார்க்க தடை
11 டாக்டர்களுக்கு மருத்துவம் பார்க்க தடை
11 டாக்டர்களுக்கு மருத்துவம் பார்க்க தடை

சென்னை: அனுமதியின்றி ஸ்கேன் சென்டர் நடத்திய 11 டாக்டர்களுக்கு மருத்துவம் பார்க்க, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ளது. இது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விதிமுறைகளை மீறி கருவில் இருக்கும் குழந்தையின் பாலின சோதனையை செய்தது, அனுமதியின்றி ஸ்கேன் சென்டர் நடத்தியது போன்ற புகார்களுக்குள்ளான 11 டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து விதிமுறைகளை மீறிய டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அபராதம் விதிக்கப்படும். தற்போது அந்த டாக்டர்கள் மருத்துவம் பார்க்க தடை விதிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பிரகாசம் கூறும்போது, மருத்துவ துறை இயக்குனரகம் அனுப்பிய கடிதத்தில் மருத்துவர்களின் பெயர்கள் மற்றும் பதிவு எண்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் அந்த கடிதத்தின் அடிப்படையில் 5 டாக்டர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் 2 டாக்டர்கள் அண்ணாநகரிலும், ஒருவர் கீழ்பாக்கத்திலும் மற்றவர்கள் மேற்குமாம்பலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மருத்துவம் பார்ப்பது தெரியவந்துள்ளது.

##~~##
மேலும் மருத்துவம் சாராத 5 தொழில்நுட்ப நிபுணர்கள் துங்கம்பாக்கம், சேத்பட், அடையாறு, மண்ணடியிலும் இந்த புகாரில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. தற்காலிகமாக இவர்களது உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாக்டர்களுக்கு மருத்துவம் பார்க்க தற்காலிகமாக 2 முதல் 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல் விதிமுறைகளை மீறும் டாக்டர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர்கள் மீத இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.