Published:Updated:

``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்?" - சந்தேகம் கிளப்பும் மம்தா!

நாடாளுமன்றத்  தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கர்ஜித்தவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. மோடியை வீழ்த்துவதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தார். மாநிலத்தில் பா.ஜ.க-வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தடுத்தார். அமித்ஷா, ஸ்மிருதி ராணி, யோகி ஆதித்யநாத் போன்ற தலைவர்களின் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையெல்லாம் தாண்டி தான் அமித்ஷா - மோடி தேர்தல் வியூகங்களை வகுத்து அங்கு 18 எம்.பி சீட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது

``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்?" -  சந்தேகம் கிளப்பும் மம்தா!

ஃபானி புயல் தாக்கத்தின் போது ‘நான் மோடியை ஒரு பிரதமராக கருதவில்லை. தேர்தல் முடியட்டும் புதிய பிரதமர் வருவார். நான் அவருடன் பேசிக்கொள்கிறேன்’என மத்திய அரசையும் மோடியையும் கடுமையாக விமர்சித்தார் மம்தா. இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய அமித்ஷா, மம்தா தயாராக இருங்கள். மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர்'' என்றார். இந்த தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க ஆட்சியமைக்கவுள்ளது. மோடியே மீண்டும் பிரதமர் அரியணையில் அமரவுள்ளார்.

``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்?" -  சந்தேகம் கிளப்பும் மம்தா!

இந்த நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “ கடந்த 6 மாதங்களாக ஒரு முதலமைச்சராக என்னால் பணியாற்ற முடியவில்லை. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கூறினேன். முதலமைச்சராகத் தொடர விருப்பம் இல்லை எனக் கூறினேன்.  ஆனால் அவர்கள் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர். அது எமெர்ஜென்சி காலம் போல் இருந்தது. தேர்தல் ஆணையம் கொடுத்த அழுத்தத்தால் என்னால் செயல்படமுடியாமல் போனது.  பாஜக வெற்றியில் சந்தேகம் உள்ளது. டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் பாஜக எப்படி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. அங்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் போட்டியிடவே இல்லையா. அந்த மாநிலங்களில் தனிப்பட்ட நபர்களின் வங்கிக்கணக்குகளுக்கு எவ்வளவு பணம் சென்றது என்பது குறித்து ஆராய வேண்டும்.

அங்குள்ள பத்திரிகையாளர்கள் மூலம் எனக்கு சில தகவல்கள் தெரியவந்தது. ஒரு ஓட்டுக்கு 5000 வரை செலவு செய்துள்ளனர். பூத் கமிட்டிடில் இருக்கும் ஏஜெண்டுகளுக்கு 3000 ரூபாய் வரையிலும் கொடுத்துள்ளனர். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் என்பது 4 % அதிகரித்துள்ளது. ஆனால் இந்த சதவிகிதத்தை மேலும் அதிகரிப்பதற்கான பணிகளில் ஈடுபடவேண்டும்.  மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட 5 சதவிகித வாக்குகள் அதிகம் பெற வேண்டும். இடதுசாரிகளின் ஒட்டு சதவிகிதம் 29 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது பாஜகவிற்கு சாதகமாக முடிந்துள்ளது” என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு