Published:Updated:

‘ராகுலின் வயநாட்டு வெற்றி; காங்கிரஸாருக்கு தலைக்கனம் ஏறப்போவதில்லை’- ரமேஷ் சென்னிதாலா

‘ராகுலின் வயநாட்டு வெற்றி; காங்கிரஸாருக்கு  தலைக்கனம் ஏறப்போவதில்லை’- ரமேஷ் சென்னிதாலா
‘ராகுலின் வயநாட்டு வெற்றி; காங்கிரஸாருக்கு தலைக்கனம் ஏறப்போவதில்லை’- ரமேஷ் சென்னிதாலா

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஜூன் 1-ம் தேதி வருகை தர உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது.

‘ராகுலின் வயநாட்டு வெற்றி; காங்கிரஸாருக்கு  தலைக்கனம் ஏறப்போவதில்லை’- ரமேஷ் சென்னிதாலா

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இருப்பினும், அக்கட்சி கேரளாவில் மொத்தம் உள்ள 20 இடங்களில் 19 இடங்கள் வென்று பெரும் சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார்.

அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட்டதும், அக்கட்சிக்கு மாநிலம் முழுவதும் கூடுதல் இடங்களில் வெற்றிகிடைக்கக் காரணமாக அமைந்தது. வயநாடு தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு 7,06,367 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளரான பி.பி.சுனீர் 2,74,597 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதனால், 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில், திருவனந்தபுரம் நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா, ’’கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி, இந்த முறை வரலாற்று வெற்றியைக் கைப்பற்றியிருக்கிறது. மொத்தமுள்ள 20 இடங்களில், ஒன்றைத் தவிர அனைத்து இடங்களிலும் வெற்றியைக் கைப்பற்றியிருக்கிறோம். 

காங்கிரஸ் தலைவர் ராகுல், வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த அமோக வெற்றியால் காங்கிரஸ் கட்சியினர் யாருக்கும் தலைக்கனம் ஏற்படப்போவதில்லை. எங்களுக்கு கூடுதல் கடமை இருப்பதை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம். தொடர்ந்து மக்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவோம்’’ என்று தெரிவித்தார். 

‘ராகுலின் வயநாட்டு வெற்றி; காங்கிரஸாருக்கு  தலைக்கனம் ஏறப்போவதில்லை’- ரமேஷ் சென்னிதாலா

இதனிடையே, கேரளாவில் உள்ள காங்கிரஸார் கூறுகையில், ’’அமேதி தொகுதியில் தோல்வியைச் சந்தித்த நிலையில், ராகுல் காந்திக்கு வயநாடு தொகுதி பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது. அதனால், அந்தத் தொகுதிமக்களுக்கு நன்றி சொல்வதற்காக, அவர் வயநாடு தொகுதிக்கு வரத் திட்டமிட்டிருக்கிறார். 

ராகுல் காந்தியின் பயணம், ஜூன் 1-ம் தேதி (சனிக்கிழமை) அல்லது ஜூன் 2-ம் தேதி (ஞாயிறு) அன்று அமைய உள்ளது. அவர் வருகைக்கான தேதி உறுதிசெய்யப்பட்டதும், பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க உள்ளோம். வயநாடு தொகுதியில் ராகுல் பயணம் விரைவில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்’’ என்றார்கள். 
 

Vikatan