Published:Updated:

தமிழகத்தைச் சேர்ந்த ரியல் சிங்கம்! - அரசியலில் இறங்கவுள்ள அண்ணாமலை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்தைச் சேர்ந்த ரியல் சிங்கம்! - அரசியலில் இறங்கவுள்ள அண்ணாமலை?
தமிழகத்தைச் சேர்ந்த ரியல் சிங்கம்! - அரசியலில் இறங்கவுள்ள அண்ணாமலை?

தமிழகத்தைச் சேர்ந்த ரியல் சிங்கம்! - அரசியலில் இறங்கவுள்ள அண்ணாமலை?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம்  ‘சிங்கம்’ இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் நடிகர் சூர்யா மிகவும் ஸ்ட்ரிக் ஆபீஸராகவும் ரவுடிகளைப் பிடிப்பதில் அதிரடியும் காட்டி வருவார். அவரின் சிங்கம் கேரக்டர் போலவே நிஜத்திலும் ஒரு போலீஸ் உள்ளார். அண்ணாமலை என்ற அவரை அவரின் ரசிகர்கள் ‘சிங்கம் அண்ணாமலை’ என்றே அழைத்து வருகின்றனர். 

தமிழகத்தைச் சேர்ந்த ரியல் சிங்கம்! - அரசியலில் இறங்கவுள்ள அண்ணாமலை?

தமிழகத்தின் கரூரை சொந்த ஊராகக் கொண்ட அண்ணாமலை 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ் முடித்தார். தற்போது கர்நாடக மாநிலத்தின் துணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார். அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து ரவுடிகள், சமூக விரோதிகளும் இவரது பெயரைக் கேட்டாலே அலறுவார்களாம். இதனால் கர்நாடகாவில் அண்ணாமலைக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், அவர் தற்போது தன் ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இறங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த ரியல் சிங்கம்! - அரசியலில் இறங்கவுள்ள அண்ணாமலை?

இது தொடர்பாக ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ள செய்தியில், ‘சிங்கம் அண்ணாமலை தன் அரசியல் பிரவேசம் பற்றி நெருங்கிய நண்பர்களுடனும் சில ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் முடிந்த பிறகு, அதாவது வரும் ஜூன் 6-ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்று அரசியல் கட்சியில் இணையவுள்ளார். ஆனால், இவர் எந்தக் கட்சியில் இணையவுள்ளார் என்பது இன்னும் தெரியவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு