Published:Updated:

`கலங்கிய ரவீந்திரநாத்; மகிழ்ச்சியில் 'மணி' அமைச்சர்கள்!' - டெல்லியில் ஓ.பி.எஸ் ஷாக்  

`கலங்கிய ரவீந்திரநாத்; மகிழ்ச்சியில்  'மணி' அமைச்சர்கள்!' - டெல்லியில் ஓ.பி.எஸ் ஷாக்  
News
`கலங்கிய ரவீந்திரநாத்; மகிழ்ச்சியில் 'மணி' அமைச்சர்கள்!' - டெல்லியில் ஓ.பி.எஸ் ஷாக்  

`கலங்கிய ரவீந்திரநாத்; மகிழ்ச்சியில் 'மணி' அமைச்சர்கள்!' - டெல்லியில் ஓ.பி.எஸ் ஷாக்  

விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பதவி ஏற்பு விழாவுக்குச் சென்றனர். அங்கு தமிழக அமைச்சர்கள் சிலருக்குக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.

`கலங்கிய ரவீந்திரநாத்; மகிழ்ச்சியில்  'மணி' அமைச்சர்கள்!' - டெல்லியில் ஓ.பி.எஸ் ஷாக்  

சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்ல காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அமைச்சர் ஒருவர் வாழ்த்துகள் அண்ணே என்று கூறியபடி அருகில் அமர்ந்தார். அப்போது இருவரும் மோடி பதவி ஏற்பு விழா குறித்து பேசிக் கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தைத் தன்னுடைய இருக்கையில் அமரும்படி அந்த அமைச்சர் கூறினார். ஆனால், பரவாயில்லை என்று அதற்கு ஓ.பன்னீர் செல்வம் சம்மதிக்கவில்லை. சிறிது நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்தார். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டனர். விமானத்தில் ஏறிய பிறகும் இருவரும் பேசியபடி பயணித்தனர். டெல்லியில் இறங்கியதும் தமிழ்நாடு இல்லத்துக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சென்றனர். தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைகளில் அவர்கள் தங்கினர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 ஓ.பன்னீர்செல்வமும் ரவீந்திரநாத்குமாரும் தங்கிய அறையில் இருந்தவர்கள் எப்போது பிரமதர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் எனக் காத்திருந்தனர். அதோடு டி.வி-யில் நேரலை செய்திகளையும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் வரவில்லை. அதனால், சோகத்தோடு ரவீந்திரநாத்குமார் அறையில் காத்திருந்தார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஷ்ட்ரபதி பவனுக்கு புறப்பட்டனர். 

`கலங்கிய ரவீந்திரநாத்; மகிழ்ச்சியில்  'மணி' அமைச்சர்கள்!' - டெல்லியில் ஓ.பி.எஸ் ஷாக்  

அங்கு செல்ல தமிழகத்துக்கு குறைவான வி.வி.ஐ.பி பாஸ்களே கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அதைவிட அதிகமானோர் விழாவுக்குச் சென்றிருந்தனர். முதல்வர், துணை முதல்வர் மற்றும் முன்னாள் எம்.பி ஒருவர் என பாஸ் வைத்திருந்தவர்கள் எளிதாக ராஷ்ட்ரபதி பவனுக்குள் சென்றுவிட்டனர். ஆனால், பாஸ் இல்லாதவர்கள் உள்ளே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பாஸ் பெற காலை முதலே பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்தார் தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர். எப்படியோ சிரமப்பட்டு கிடைத்த பாஸ்கள் அமைச்சர்களுக்கும் அவர்களுடன் வந்த கட்சியினருக்கும் கொடுக்கப்பட்டன. அப்போதுதான் கார் பாஸ் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரே காரில் அமைச்சர்கள் சென்றுள்ளனர். இடநெருக்கடி காரணமாக ஒருவர் மடியில் ஒருவர் என அமைச்சர்கள் பயணித்துள்ளனர். 

விழா முடிந்ததும் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இன்று காலையிலேயே விமானம் மூலம் சென்னை திரும்பினர். ஆனால், ஓ.பன்னீர்செல்வமும் அவரின் மகனுமான ரவீந்திரநாத்குமார் எம்.பி-யும், பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மட்டும் டெல்லியில் உள்ளனர். அமைச்சர் பதவி இல்லை என்றதும் ரவீந்திரநாத் இரவு சாப்பிடவில்லை. மகனுக்கு ஆறுதல் கூறிய ஓ.பன்னீர்செல்வமும் சோகத்தோடு அறைக்குள் இருந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களில் சிலர், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றதும் கண்ணீர்விட்டுள்ளனர். அவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல் கூறியுள்ளார். 

`கலங்கிய ரவீந்திரநாத்; மகிழ்ச்சியில்  'மணி' அமைச்சர்கள்!' - டெல்லியில் ஓ.பி.எஸ் ஷாக்  

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர், ``அமைச்சர் பதவி இல்லை எனத் தெரிந்ததும் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத்குமார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்கக் கூடாது எனக் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மணி அமைச்சர்கள், செக் வைத்த தகவல் கிடைத்ததும் எங்களுக்குக் கடும் அதிர்ச்சியாக இருந்தது. தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவத்தைத் தட்டிப்பறித்துவிட்டார்களே என்ற வருத்தம்தான் எங்களுக்கு உள்ளது. ரவீந்திரநாத்குமார், ஜூனியர் எனக் காரணம் சொல்லும் கொங்கு மண்டலத்தினர், சீனியர் யாருக்காவது அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்திருக்கலாம். குறிப்பாக, வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி கிடைத்திருந்தால் அதை நாங்கள் வரவேற்று இருப்போம். ரவீந்திரநாத்குமார், அமைச்சராகியிருந்தால் கட்சி வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால், கோஷ்டி பூசல் காரணமாக இப்படி செய்துவிட்டார்கள்'' என்றார் ஆதங்கத்துடன். 

`கலங்கிய ரவீந்திரநாத்; மகிழ்ச்சியில்  'மணி' அமைச்சர்கள்!' - டெல்லியில் ஓ.பி.எஸ் ஷாக்  

ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி என்ற தகவல் பரவியதும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி கேட்டால் ஓ.பன்னீர்செல்வம் அமைதியாகிவிடுவார் என பிளான்போட்டு ரவீந்திரநாத்குமாருக்கு செக் வைத்தனர் கொங்கு மண்டல அ.தி.மு.க-வினர். அமைச்சர் பதவி கிடைக்காமலிருக்க சீனியர், ஜூனியர் என பிரச்னையை ஏற்படுத்தி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆசை நிறைவேறவிடாமல் தடுத்துவிட்டனர். எப்படியாவது ரவீந்திரநாத்குமாரை அமைச்சராக்கிவிட வேண்டும் என்ற உறுதியோடு ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அவருக்குத் தெரிந்த பா.ஜ.க மேலிட தொடர்புகள் மூலம் மீண்டும் தூதுவிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். 

`கலங்கிய ரவீந்திரநாத்; மகிழ்ச்சியில்  'மணி' அமைச்சர்கள்!' - டெல்லியில் ஓ.பி.எஸ் ஷாக்  

பொறுத்திருங்கள் என்ற பதில் மட்டும் பா.ஜ.க மேலிடத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு வந்துள்ளது. இதனால் சோகத்தோடு சென்னைக்கு இன்று இரவு அவர் வருகிறார். வரவேற்பு ஏற்பாடுகளைத் தவிர்க்குமாறு ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களும் சோகத்தோடு உள்ளனர்.