Published:Updated:

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

நெகிழ வைத்த பள்ளிக் குழந்தைகள்

தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் உள்வாங்கி இருக்கிறது, குட்டூர் அரசு ஆரம்பப் பள்ளி. மேலாண்டிஅள்ளி, கீழாண்அள்ளி, குட்டூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகள் 59 பேர் இங்கு படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் ஆசிரியை விஜயலட்சுமி, விகடனில் வந்த தலையங்கத்தை தன் பள்ளிக் குழந்தைகளிடம் படித்துக் காட்டி இருக்கிறார். உடனே, துயர் துடைப்புக்கான நிதி திரட்டுவதற்கு தலைமை ஆசிரியர் வேலுமணியிடம் குழந்தைகள் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

அவர் சம்மதம் சொன்னதும் குழந்தைகளும் தங்களால் இயன்றதை வழங்கி, மொத்தம் 1,864 ரூபாய் திரட்டி இருக்கிறார்கள். ஊர்ப் பிரமுகர்கள், ஊராட்சித் தலைவர் உட்பட பலரிடம் சேகரித்த இந்தத் தொகையோடு ஆசிரியர்களின் பங்களிப்பையும் சேர்த்து 2,000 ரூபாய்க்கு டிராப்ட் எடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

கோரிக்கையை ஏற்ற முதல்வர்!

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

'விகடன்’ ஏற்பாட்டில் கடந்த ஜனவரி 22-ம் தேதி இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் 'வேட்டவலம்’ மணிகண்டன் தலைமையில் 15 விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொண்ட குழு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். ஜனவரி 26-ம் தேதி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் 'அரச்சலூர்’ செல்வம் தலைமையிலும் ஒரு குழு மக்களைச் சந்தித்தது. விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய துயர் துடைப்புப் பணிகள் குறித்து முதல்வரிடம் விரிவான கோரிக்கை மனுவை அளித்தார் மணிகண்டன். அதன்படி கடந்த 4-ம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு 790 கோடி ரூபாயில் சிறப்பு தொகுப்புத் திட்டம் ஒன்றை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகள் பலவும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

முதியோர் கண்களில் ஈரம்...

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

சென்னை கீழ்க்கட்டளையில் உள்ளது ஸ்ரீபெருந்தேவி முதியோர் இல்லம். நம் அலுவலகத்துக்கு வந்த, அந்த இல்லத்தின் நிர்வாகி அரங்கநாதன், ''எங்க முதியோர் இல்லத்தில் மொத்தம் 65 முதியவர்கள் இருக்காங்க. பிள்ளைகளைப் பிரிஞ்சு வாழுற அவுங்களுக்கு 'ஆனந்த விகடன்’தான் ஆறுதல். உங்க இதழில் வந்த, 'தானே’ கோரத்தாண்டவத்தை படிச்சிட்டு, 'நம்மைவிட அந்த மக்கள் அதிகக் கஷ்டப்படுறாங்க’ன்னு  ஆளுக்குத் தகுந்தபடி 100, 500-ன்னு நிதி திரட்டி மொத்தமா 10,000 ரூபாய் கொடுத்தாங்க...'' என்று நெகிழ்வுடன் கொடுத்தார்.

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!
அடுத்த கட்டுரைக்கு