Published:Updated:

கொட்டும் மழையில் 2 மணி நேரம் காத்திருந்த மக்கள்! - வயநாட்டில் ராகுல் காந்திக்கு தடபுடல் வரவேற்பு

குருபிரசாத்
கொட்டும் மழையில் 2 மணி நேரம் காத்திருந்த மக்கள்! - வயநாட்டில் ராகுல் காந்திக்கு தடபுடல் வரவேற்பு
கொட்டும் மழையில் 2 மணி நேரம் காத்திருந்த மக்கள்! - வயநாட்டில் ராகுல் காந்திக்கு தடபுடல் வரவேற்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கேரளா வந்துள்ளார்.

கொட்டும் மழையில் 2 மணி நேரம் காத்திருந்த மக்கள்! - வயநாட்டில் ராகுல் காந்திக்கு தடபுடல் வரவேற்பு

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றி பெற்றார். இந்நிலையில், வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் மூன்று நாள் பயணமாக கேரளா வந்துள்ளார். முதல் நாளான நேற்று அவர் மலப்புரம், நிலம்பூர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். ராகுல்காந்தியால் பிரதமர் ஆகமுடியவில்லை என்றாலும், வயநாடு மக்கள் அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். 'We Are With You' (நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்)  'Nation needs You' (தேசத்துக்கு நீங்கள் தேவை) போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ராகுலை வரவேற்றனர். வயநாடு முழுவதுமே ராகுலை வரவேற்று, பிரமாண்ட பேனர், கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, வயநாடு தொகுதியில் பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால்,  கொட்டும் மழையிலும் சுமார் இரண்டு மணி நேரம் வரை நனைந்தபடி மக்கள் ராகுலை சந்தித்தனர். 

கொட்டும் மழையில் 2 மணி நேரம் காத்திருந்த மக்கள்! - வயநாட்டில் ராகுல் காந்திக்கு தடபுடல் வரவேற்பு

பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, "வயநாடு தொகுதி மக்களுக்காக என்னுடைய கதவு எப்போதும் திறந்திருக்கும். ஒரு எம்.பி-யாக உங்கள் பிரச்னையை முழுமையாக அணுகி, அதற்கான தீர்வை கொடுக்க முயற்சி செய்வேன். வயநாடு மட்டுமல்ல, கேரள மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். எளிய மக்களைப் பாதுகாக்கும், எதிர்க்கட்சியாக செயல்படப் போகிறோம்.

கொட்டும் மழையில் 2 மணி நேரம் காத்திருந்த மக்கள்! - வயநாட்டில் ராகுல் காந்திக்கு தடபுடல் வரவேற்பு

மோடியின் திட்டங்களால், பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்கும் வகையில் எங்கள் குரல் ஒலிக்கும். நரேந்திர மோடி அரசு, நாடு முழுவதும் வெறுப்பு அரசியலைப் பரப்பி வருகிறது. அதை எதிர்ப்பதற்கு அன்பு மட்டுமே ஒரே வழி என்பதை காங்கிரஸ் அறியும்" என்றார்

Vikatan