Published:Updated:

காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க, இன்னும் அந்த இரவு விடியல! - கலங்கும் அற்புதம்மாள்

காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க, இன்னும் அந்த இரவு விடியல! - கலங்கும் அற்புதம்மாள்
காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க, இன்னும் அந்த இரவு விடியல! - கலங்கும் அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க, இன்னும் அந்த இரவு விடியல! - கலங்கும் அற்புதம்மாள்

இந்த வழக்கில், தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவையும் கூடி தீர்மானம் நிறைவேற்றி, அந்தக் கோப்பு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏழு பேரின் விடுதலை தற்போது ஆளுநரின் ஒற்றைக் கையொப்பத்தில் வந்து நிற்கிறது. 

காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க, இன்னும் அந்த இரவு விடியல! - கலங்கும் அற்புதம்மாள்

தன் மகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நீண்ட காலமாகப் போராடி வருகிறார். கட்சிகளுடன் இணைந்து போராட்டம், மக்களிடம் ஆதரவு கேட்டு சுற்றுப்பயணம் போன்ற பல வழிகளில் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்துவருகிறார். இருந்தும் அவரது போராட்டத்துக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், தன் மகன் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது என்பதை உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அற்புதம்மாள், ``காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29-ம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல. அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா என் மகன் வாழ்க்கை மாறிடிச்சு.

காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க, இன்னும் அந்த இரவு விடியல! - கலங்கும் அற்புதம்மாள்

வெளியே நானும், உள்ளே அவனும் போராடி மருகி செத்துப் போகலாம். ஆனா காரணமானவங்கள காலம் அடையாளம் காட்டும். 161-ல் பேரறிவாளன் தந்த மனுமீது உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவ மதிக்காம குப்பையா நினைக்கிறவங்கதான்,  தீர்ப்புதந்த நீதிபதி, வாக்குமூலம் பதிஞ்ச அதிகாரி உண்மைய சொன்னபிறகும் அறிவை குற்றவாளின்னு  சொன்ன தீர்ப்ப மட்டும் மதிக்கணும்னு கூக்குரலிடறாங்க. 

காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க, இன்னும் அந்த இரவு விடியல! - கலங்கும் அற்புதம்மாள்

உண்மை குற்றவாளிய கண்டறிய போராடாம, மறைந்தவர் பெயரால அருவருப்பான அரசியல் செய்யறாங்க. விடுதலைக்கான வெற்று அடையாள அரசியல், சலிப்பை தருது. 28 ஆண்டுல சட்டத்தின் ஆட்சி என்னன்றத நல்லா பாத்துட்டேன். சட்டம், நீதிங்கறது பணம், பதவியுள்ளவங்களுக்கு மட்டுமே உள்ள வசதியா நீடிக்கனுமா? “ என கேள்வி எழுப்பியுள்ளார். 

காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க, இன்னும் அந்த இரவு விடியல! - கலங்கும் அற்புதம்மாள்
Vikatan