Published:Updated:

மோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்!

மோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்!
மோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்!

அண்டை மாநிலமான கேரள மக்கள் அரசியலில் இறங்கும் நடிகர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற பேச்சு உண்டு. ஆனால், தமிழகத்தில் திரை நட்சத்திரங்களை எப்படி உச்சத்தில் வைத்துகொண்டாடுகிறோமோ அதைப்போலக் கொண்டாடி தீர்ப்பார்கள். ஆனால், அரசியல் என்று வந்துவிட்டால் நடிகர்களை ஒதுக்குவதில் தயங்க மாட்டார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் என்றால் சுரேஷ் கோபியைச் சொல்லலாம். திரை நட்சத்திரம் என்ற அந்தஸ்துடன் பா.ஜ.க-வில் சேர்ந்து திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அவர் தோற்கடிக்கப்பட்டார். இதற்கிடையே கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம் ஒன்று பேசுபொருளாக மாறியுள்ளது.

மோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்!

நேற்றுமுன்தினம் பாலக்காடு அருகே உள்ள நெம்மாராவில் மருத்துவமனை திறப்பு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மோகன்லாலும் கலந்துகொண்டார். அப்போது, அங்கிருந்த ரசிகர்கள் பலரும் மோகன்லாலை வரவேற்றுக் கூச்சலிட ஆரம்பித்தனர். ஆரம்பம் முதலே கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்கள், பினராயி பேசும்போது அதைத் தொடர்ந்தனர். இதனால் அப்செட்டான பினராயி மேடையிலேயே இதைச் சுட்டிக்காண்பித்தார். அதில், ``நாம் நாட்டைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும்போது சிலர் அதிலிருந்து ஒதுங்கியிருப்பார்கள். 

மோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்!

மோகன்லால் என்னும் நடிகர் கேரளாவின் பெருமை. அவரை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், ரசிகர்கள் நடிகர்களைப் புகழ்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். அதைத் தாண்டி அவர்களுக்கு வேறு உலகம் எதுவும் இல்லை. அதனால்தான் இப்படி இடையிடையே கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சாதாரண காரியம்தான். இதைப் பற்றி வேறு ஒன்றும் ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை. கடைசி வரை அவர்கள் இப்படிதான் கத்திக்கொண்டே இருப்பார்கள். இது அவர்களுடைய வயதின் காரியம். அது மட்டுமே" எனச் சிரித்துக்கொண்டே கூறினார். பின்னர் பேசிய மோகன்லாலும் இந்த அதிருப்தியைப் பற்றி பேசவில்லை. இதனால் கடைசி வரை பினராயிக்கு இடைஞ்சல் கொடுக்கும் விதமாகக் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர் ரசிகர்கள். இது அங்கு சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

Vikatan