Published:Updated:

``சாதிக்காரர், கட்சிக்காரர் ரெண்டுபேருமே ஓட்டுப்போடலை!'' - கொந்தளித்த தங்க.தமிழ்ச்செல்வன்

``சாதிக்காரர், கட்சிக்காரர் ரெண்டுபேருமே ஓட்டுப்போடலை!'' - கொந்தளித்த தங்க.தமிழ்ச்செல்வன்
``சாதிக்காரர், கட்சிக்காரர் ரெண்டுபேருமே ஓட்டுப்போடலை!'' - கொந்தளித்த தங்க.தமிழ்ச்செல்வன்

``வாக்குப்பதிவு இயந்திரத்தைக் குறைசொல்வது முட்டாள்தனம். உண்மையில் என் சாதிக்காரரே எனக்கு ஓட்டு போடல…” எனத் தனது சகாக்களிடம் சொல்லி புலம்பியிருக்கிறார், தங்க.தமிழ்ச்செல்வன்.

 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார், அ.ம.மு.க வேட்பாளரும், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான தங்க.தமிழ்ச்செல்வன். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்க.தமிழ்ச்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், மீண்டும் ஆண்டிபட்டியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தேனி எம்.பி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் செய்தியறிந்து, `தானும் எம்.பி தேர்தலில் நிற்பேன்' என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் பேசி, சீட்பெற்று தேர்தலில் போட்டியிட்டார் தங்க.தமிழ்ச்செல்வன்.

இது ஒருபக்கமிருக்க, மற்றொரு பக்கம் காங்கிரஸ் சார்பில் அதன் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிறுத்தப்பட்டதும், மும்முனைப் போட்டியாக அமைந்தது. இறுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இரண்டாம் இடமும், தங்க.தமிழ்செல்வன் மூன்றாவது இடமும் பெற்றனர். இதனால், பெரிதும் அப்செட் ஆனார், தங்க.தமிழ்ச்செல்வன். காரணம், அவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே தேனி மாவட்டத்தின் பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றனர். இவர்களுடைய வாக்கு வங்கியே அத்தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அப்படியிருக்கையில், இரண்டாம் இடம்கூடப் பெறமுடியாமல் போனது பெரும் அதிர்ச்சியை தங்க.தமிழ்ச்செல்வனுக்குக் கொடுத்தது.

``சாதிக்காரர், கட்சிக்காரர் ரெண்டுபேருமே ஓட்டுப்போடலை!'' - கொந்தளித்த தங்க.தமிழ்ச்செல்வன்

``என் சாதிக்காரரே எனக்கு ஓட்டு போடலை!"

இந்நிலையில், அ.ம.மு.க சார்பில் தங்க.தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டதும், தேனி தொகுதியின் அடுத்த எம்.பி இவர்தான் என்று கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல, தனது சமுதாய பெரியவர்களைச் சந்திப்பதும், சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் கிராமங்களில் அதிக கவனம் செலுத்துவதுமாகத் தேர்தல் சமயத்தில் வேகம் காட்டினார். எல்லாம் கணக்குசெய்து பார்த்தால், ரவீந்திரநாத் குமாரைவிட குறைந்தது 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றுவிடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், இறுதியில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட தங்க.தமிழ்ச்செல்வன் பெற்ற மொத்த வாக்குகள் 1,44,050 வாக்குகள். ரவீந்திரநாத் குமார் பெற்ற மொத்த வாக்குகள் 5,04,813 வாக்குகள். இரண்டு பேருக்குமான வித்தியாசம் மட்டும் 3,60,763 வாக்குகள். தேர்தல் முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார், தங்க.தமிழ்ச்செல்வன். ``வாக்குப்பதிவு இயந்திரத்தைக் குறைசொல்வது முட்டாள்தனம். உண்மையில் என் சாதிக்காரரே எனக்கு ஓட்டு போடல…” எனத் தனது சகாக்களிடம் சொல்லி புலம்பியிருக்கிறார், தங்க.தமிழ்ச்செல்வன்.

``சாதிக்காரர், கட்சிக்காரர் ரெண்டுபேருமே ஓட்டுப்போடலை!'' - கொந்தளித்த தங்க.தமிழ்ச்செல்வன்

அ.ம.மு.க-வினரும் ஓட்டு போடலையா?!

அதிக வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்குகளை ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும், ரவீந்திரநாத் குமாரும் பிரித்து எடுத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது. இவை எல்லாம் ஒருபுறம் என்றால், மறுபுறம் அ.ம.மு.க-வின் உயர்மட்ட நிர்வாகிகள் முதல் பூத் ஏஜென்ட் வரையிலான அனைவரும், அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் இருவரும் எனப் பரிசுப் பெட்டிக்கு வாக்களித்திருந்தால், குறைந்தது 2,50,000 வாக்குகளுக்கு மேல் தங்க.தமிழ்ச்செல்வன் பெற்றிருக்க முடியும். இந்தக் கணக்கை தங்க.தமிழ்ச்செல்வனும் போட்டுவைத்திருந்தார். ஆனால், பெற்ற வாக்குகளோ வெறும் 1,44,050 வாக்குகள். அப்படியிருக்கையில், அ.ம.மு.க-வினரும்கூடத் தனக்கு வாக்களிக்கவில்லை என அழுத்தமாக உணர்ந்துகொண்டார், தங்க.தமிழ்ச்செல்வன். இந்நிலையில்தான் ஜூன் 18 மாலை, தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அ.ம.மு.க-வினருடனான தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

கோபத்தின் உச்சிக்கே சென்ற தங்க.தமிழ்ச்செல்வன்!

கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பாகப் பேசும் கூட்டம் என்பதால் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தங்க.தமிழ்ச்செல்வனுக்கு நெருக்கமான சிலரிடம் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது எனக் கேட்டோம்.

``சாதிக்காரர், கட்சிக்காரர் ரெண்டுபேருமே ஓட்டுப்போடலை!'' - கொந்தளித்த தங்க.தமிழ்ச்செல்வன்

``ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், போடி ஆகிய நான்கு தொகுதி நிர்வாகிகளையும் அழைத்திருந்தோம். தொகுதி வாரியாக தங்க.தமிழ்ச்செல்வன் பேசினார். `எப்படித் தோற்றோம் என்று நீங்களே சொல்லுங்கள்' எனக் கேட்டார். சிலர் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைசொன்னார்கள். சிலரின் உள்ளடி வேலைகளைக் கூறினார்கள். அந்தச் சிலர் இப்போது அ.ம.மு.க-வில் இல்லை. அ.தி.மு.க-விற்குச் சென்றுவிட்டார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தங்க.தமிழ்ச்செல்வன், சில நேரங்களில் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். கட்சிக்காரர்களிடம் கோபமாகப் பேசினார். அப்போ… சாதிக்காரரும் ஓட்டு போடல… கட்சியினரும் ஓட்டு போடல… அப்படித்தானே… எனப் பேசினார்” என்றனர்.

மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டார், தங்க.தமிழ்ச்செல்வன்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு