Published:Updated:

`செய்தியாளர்கள் யாரையும் காணோம்!' - ஆளுங்கட்சி சேனல் கேமராவை உடைத்த அமைச்சர்?

`செய்தியாளர்கள் யாரையும் காணோம்!' - ஆளுங்கட்சி சேனல் கேமராவை உடைத்த அமைச்சர்?
`செய்தியாளர்கள் யாரையும் காணோம்!' - ஆளுங்கட்சி சேனல் கேமராவை உடைத்த அமைச்சர்?

திருத்தங்கல்லில் நடந்த கோயில் தேரோட்டத்தைப் படம் பிடிக்க செய்தியாளர்கள் வராததால் ஆத்திரமடைந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நியூஸ் ஜெ. செய்தியாளரின் கேமராவைப் பிடுங்கி கீழே போட்டு உடைத்தார்.

`செய்தியாளர்கள் யாரையும் காணோம்!' - ஆளுங்கட்சி சேனல் கேமராவை உடைத்த அமைச்சர்?

தமிழக அரசியலில் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பெயர்பெற்றவர், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. `மோடி எங்கள் டாடி, மதுவிலக்கை அமல்படுத்தினால்... குடிமகன்களுக்கு கை கால் நடுக்கம் ஏற்படும்' என அடிக்கடி ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர். இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் நடந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே, அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் அரசியல் ரீதியான கேள்விகளைக் கேட்க வேண்டாம் என கடந்த சில நாள்களாக செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

`செய்தியாளர்கள் யாரையும் காணோம்!' - ஆளுங்கட்சி சேனல் கேமராவை உடைத்த அமைச்சர்?

தண்ணீர் பிரச்னை, கூட்டுக்குடிநீர் திட்டம், குடிநீர் பிரச்னைக்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். தான் பேசிய சர்ச்சையான கருத்துகள் எல்லாம் உடனடியாக பரவிய நிலையில், தன்னுடைய மற்ற கருத்துகள் ஊடகங்களில் அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அவர் கருதியாகத் தெரிகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவரது  ஊரான திருத்தங்கல்லில் உள்ள புகழ்பெற்ற நின்ற நாராயணபெருமாள் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. செய்தியாளர்கள் யாரும் வரவில்லை என்று தெரிகிறது.

`செய்தியாளர்கள் யாரையும் காணோம்!' - ஆளுங்கட்சி சேனல் கேமராவை உடைத்த அமைச்சர்?

இதனால், தங்கள் கட்சி தொலைக்காட்சியான நியூஸ் ஜெ. செய்தியாளரை அழைத்தார். சிறிது நேரத்தில் சிவகாசி தாலுகா செய்தியாளர் சம்பவ இடத்துக்கு வந்தார். ஆனால், பெரும்பாலான செய்தியாளர்கள் வராததால் ஆத்திரமடைந்த அமைச்சர், தங்கள் கட்சி தொலைக்காட்சியின் (நியூஸ் ஜெ.) செய்தியாளரிடமிருந்த கேமராவைப் பிடுங்கி, கீழே போட்டு உடைத்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டு அங்கிருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நியூஸ் ஜெ. மாவட்ட செய்தியாளர் கண்ணனிடம் கேட்டபோது,`அமைச்சர் கூட்டத்திற்குச் சென்றபோது, செய்தியாளரின் கையில் இருந்த கேமரா கீழே விழுந்து உடைந்தது. இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடைபெறவில்லை' எனத் தெரிவித்தார்.

Vikatan