Published:Updated:

`நடிகர் சங்கம் தனிப்பட்ட அமைப்பு; தேர்தலில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை!' - அமைச்சர் கடம்பூர் ராஜு

`நடிகர் சங்கம் தனிப்பட்ட அமைப்பு; தேர்தலில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை!' - அமைச்சர் கடம்பூர் ராஜு
`நடிகர் சங்கம் தனிப்பட்ட அமைப்பு; தேர்தலில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை!' - அமைச்சர் கடம்பூர் ராஜு

``நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு எதும் இல்லை. நடிகர் சங்கம் என்பது தனி ஒரு அமைப்பு. எனவே, அதில் அரசியல் தலையீடுக்கு வாய்ப்பே இல்லை” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

`நடிகர் சங்கம் தனிப்பட்ட அமைப்பு; தேர்தலில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை!' - அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர்த்தேவை மற்றும் குடிநீர் சிக்கன நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீர்சேமிப்பு விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விழிப்புணர்வு குருந்தகட்டை வெளிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

``அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் ரூ.282.44 கோடி மதிப்பில் குடிநீர் தேவைக்காக வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 4வது பைப் லைன் திட்டம் மூலம் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 50 எம்.எல்.டி. அளவு தண்ணீர் தேவை உள்ள நிலையில்  30 எம்.எல்.டி அளவு தண்ணீர், தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மீதம் குடிநீர் தேவையாக உள்ள 20 எம்.எல்.டி. தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

`நடிகர் சங்கம் தனிப்பட்ட அமைப்பு; தேர்தலில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை!' - அமைச்சர் கடம்பூர் ராஜு

110  விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட ஆலந்தலை நீர் சுத்திகரிப்பு குடிநீர் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடிய நிலையில் உள்ளது. ஆகவே, அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அறிவிக்கப்படாத திட்டமாக வைப்பாறு பகுதியிலும் குடிநீர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்திடவும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இந்த நிலையில், தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை என்று வரும்போது அதில் தகுந்த ஆலோசனைகளை எடுத்துக் கூறுவதுதான் நல்ல எதிர்க்கட்சிக்கு அடையாளம். ஆனால், தி.மு.க-வினர் தண்ணீர்ப் பிரச்னையை அரசியல் ஆதாயமாக்க நினைத்து போராட்டம் நடத்துகின்றனர். அ.தி.மு.க அரசு மீது குறை கூறுவதையே குறியாகக் கொண்டுள்ளார் ஸ்டாலின். இந்நேரத்தில் அவர்கள் நடத்துகிற ஆர்ப்பாட்டங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு என்பது இல்லை. நடிகர் சங்கம் என்பது தனி ஒரு அமைப்பு. எனவே, அதில் அரசியல் தலையீடுக்கு வாய்ப்பே இல்லை.” என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு