Published:Updated:

`பாசிட்டிவ்வா இருங்க ராகுல் ஜி’ - அட்வைஸ் செய்த அமித் ஷா

`பாசிட்டிவ்வா இருங்க ராகுல் ஜி’ - அட்வைஸ் செய்த அமித் ஷா
`பாசிட்டிவ்வா இருங்க ராகுல் ஜி’ - அட்வைஸ் செய்த அமித் ஷா

`பாசிட்டிவ்வா இருங்க ராகுல் ஜி’ - அட்வைஸ் செய்த அமித் ஷா

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியாவின் பல இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு யோகா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அதேபோல இந்திய பாதுகாப்புப் படையினரும் இமயமலை, தண்ணீர் போன்ற இடங்களில் யோகா செய்து அசத்தினர்.

`பாசிட்டிவ்வா இருங்க ராகுல் ஜி’ - அட்வைஸ் செய்த அமித் ஷா

அதில் ஒன்றாக இந்திய ராணுவத்தினர் தங்களிடம் உள்ள நாய்களுடன் இணைந்து யோகா செய்தனர். ராணுவத்தினர் செய்யும் அனைத்து யோகாக்களையும் நாய்களும் செய்து பிரமிக்கவைத்தது. இந்தப் புகைப்படங்கள் நேற்று முழுவதும் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்திருந்தன.

இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராணுவத்தினருடன் இணைந்து நாய்கள் யோகா செய்யும் புகைப்படத்தைப் பதிவிட்டு  ‘புதிய இந்தியா’ எனத் தன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ராகுலின் இந்த ட்வீட்டை ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

`பாசிட்டிவ்வா இருங்க ராகுல் ஜி’ - அட்வைஸ் செய்த அமித் ஷா

இது பற்றி கருத்து பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “காங்கிரஸ் எப்போதும் எதிர்மறையாகவே உள்ளது. முத்தலாக் சட்ட மசோதாவில் காங்கிரஸ் அளித்த ஆதரவு முறையிலிருந்தே அவர்களின் எதிர்மறை தெரிந்தது. தற்போது அவர்கள் நம் யோகா தினத்தையும் ராணுவத்தையும் கேலி செய்துள்ளனர். தொடர்ந்து செய்துகொண்டும் உள்ளனர். இனியாவது உங்களின் நேர்மறை எண்ணம் மேலோங்கும் என நம்புகிறேன். அது அனைத்துவித கடினமான சவால்களிலிருந்தும் வெளியில் வர உதவும்” எனப் பதிவிட்டுள்ளார். 

`பாசிட்டிவ்வா இருங்க ராகுல் ஜி’ - அட்வைஸ் செய்த அமித் ஷா

“உங்களுக்கான மரியாதையுடன் கூறுகிறேன் ராகுல் ஜி. அவர்கள் நம் ராணுவத்தின் பெருமை வாய்ந்த வீரர்கள். அவர்கள் நம் நாட்டின் பாதுகாப்புக்காகப் பாடுபடுகிறார்கள். யாராவது நம் ராணுவத்தினரை மீண்டும் மீண்டும் அவமதிக்கும்போது, கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும் என்றுதான் பிரார்த்தனை செய்ய முடியும்” என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

`பாசிட்டிவ்வா இருங்க ராகுல் ஜி’ - அட்வைஸ் செய்த அமித் ஷா

பா.ஜ.க-வின் கர்நாடக எம்.பி தேஜஸ்வி சூர்யா, “ராகுல் காந்தி இன்னும் அவரது தவற்றிலிருந்து பாடம் கற்கவில்லை. இந்திய ராணுவம், துணிச்சலான ராணுவ வீரர்கள், நம்பமுடியாத நாய்களின் செயல், நம் கலாசாரமான யோகா, நாடு ஆகியவற்றை அவர் மீண்டும் ஒரு முறை அவமதித்துவிட்டார். இந்த மனிதரை தங்கள் தலைவராகச் சமாளிக்கும், காங்கிரஸ் இளம் தொண்டர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

`பாசிட்டிவ்வா இருங்க ராகுல் ஜி’ - அட்வைஸ் செய்த அமித் ஷா

ராகுல் காந்தியின் இந்தக் கருத்தை அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு