Published:Updated:

பிரதமர் அலுவலகத்துக்குப் பறந்த ஒரு கடிதம்! - சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர், சுமர் சிங். அவரது 17 வயது மகள் நீண்ட நாள்களாக குறை பிறப்பு ரத்தச்சோகை (aplastic anemia) நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுவந்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்துக்குப் பறந்த ஒரு கடிதம்! - சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மோடி

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில், புதிய ரத்தசெல்கள் உருவாவது முற்றிலும் நின்றுவிடும். இதைச் சரிசெய்ய, பல மருத்துவமனைகளுக்கு அலைந்தும் அவரது நோயைக் குணப்படுத்த முடியவில்லை. இறுதியில், சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்துக்குப் பறந்த ஒரு கடிதம்! - சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மோடி

தன் மகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுத்து, தன்னிடம் உள்ள  எல்லா பணத்தையும் அளித்துள்ளார், சுமர் சிங். இருந்தும் அந்தப் பணம் போதாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், தன் மகளுக்கு அரசு உதவ வேண்டும் எனப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்துக்குப் பறந்த ஒரு கடிதம்! - சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மோடி

அவர் எழுதிய கடிதத்தில், “என் மகளின் மருத்துவச் செலவுக்காக முதலில் என் நிலத்தை விற்றேன். பிறகு எங்கள் வீட்டையும் அடகு வைத்து இதுவரை எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். ஆனால், எலும்பு மஜ்ஜை அறுவைசிகிச்சை செய்ய 10 லட்சத்துக்கும் அதிகமாகச் செலவாகும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.என் மகள் பிழைத்தால் மட்டுமே எங்களுக்கு வாழ்வு. அவளும் இல்லை என்றால் நாங்கள் சாவதைத் தவர வேறு வழி தெரியவில்லை. மகளின் மருத்துவச் செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம், பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்ததும், உடனடியாக சிறுமியின் மருத்துவச் செலவுக்கு 30 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தப் பணம், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.  

அடுத்த கட்டுரைக்கு