Published:Updated:

தேனி நிர்வாகிகளுடன் சென்னையில் தினகரன் ஆலோசனை - நீக்கப்படுகிறாரா தங்க தமிழ்ச்செல்வன்?

டி.டி.வி தினகரனை விமர்சித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ நேற்று வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இன்று தங்க தமிழ்ச்செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தேனி நிர்வாகிகளுடன் சென்னையில் தினகரன் ஆலோசனை - நீக்கப்படுகிறாரா தங்க தமிழ்ச்செல்வன்?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரான டி.டி.வி தினகரனின் வலதுகரமாக இருந்து செயல்பட்டவர் தங்க தமிழ்ச்செல்வன். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். ``கட்சியின் சின்னம் சரியில்லை. அதனால்தான் தோற்றேன்!'' எனக் கூறிவந்தார். அதைத்தொடர்ந்து ``ஆளும், அ.தி.மு.க அரசு பிளாஸ்டிக்கை ஒழித்து சாதனை படைத்துள்ளது'' என்று பேசினார்.

இப்படி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க-’வில் இணையப்போகிறார் என தகவல் வெளியானது. அதையடுத்து, மதுரை அ.ம.மு.க வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, உசிலம்பட்டி அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில், தேனியில் உள்ள அ.ம.மு.க நிர்வாகிகளை அழைத்து ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினர். அதை அறிந்த தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி தினகரனை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அந்த ஆடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தேனி மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளில் பெரும்பாலோனோர் இன்று சென்னையில் உள்ள டி.டி.வி தினகரனின் இல்லத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு டி.டி.வி தினகரன் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறார். அதன் பின்னர், தேனி மாவட்டத்துக்கு புதிய நிர்வாகி நியமிக்கப்படலாம் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வனின் இடத்துக்கு சின்னமனூர் அ.ம.மு.க ஒன்றியச் செயலாளர் முத்துச்சாமி நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு பெரியகுளம் அ.ம.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட கதிர்காமு, ஆண்டிபட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜெயகுமார் ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு