Election bannerElection banner
Published:Updated:

கரூர் கலெக்டர் தொடர்ந்த வழக்கு - செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு நிபந்தனை ஜாமீன்!

கரூர் கலெக்டர் தொடர்ந்த வழக்கு  - செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு நிபந்தனை ஜாமீன்!
கரூர் கலெக்டர் தொடர்ந்த வழக்கு - செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு நிபந்தனை ஜாமீன்!

கரூர் கலெக்டர் தொடர்ந்த வழக்கு - செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு நிபந்தனை ஜாமீன்!

நாடாளுமன்றத் தேர்தலின்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.
 

கரூர் கலெக்டர் தொடர்ந்த வழக்கு  - செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு நிபந்தனை ஜாமீன்!

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணிக்கு ஆதரவாக, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ளும்போது, 'இப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வது கூடாது' எனக் கூறி, இரண்டு இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரையும் தி.மு.க-வினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு செந்தில் பாலாஜி, "ஆளுங்கட்சி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தூண்டுதலின்பேரில், எங்களை இருவரும் கத்தியால் குத்தவந்தனர்" என்று அதிரடிப் பேட்டி கொடுத்தார்.

கரூர் கலெக்டர் தொடர்ந்த வழக்கு  - செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு நிபந்தனை ஜாமீன்!

இதேபோல், தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளுக்கு முந்திய நாளான ஏப்ரல் ந்ம் தேதி இரவு, இறுதிக்கட்ட பிரசாரம் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் நடத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் செந்தில்குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்றனர்.   ஆனால், மாவட்ட ஆட்சியர் அன்பழகனோ, "இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியர் என்றும் பாராமல் என்னை தாக்க 100 அடியாட்களை செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் அனுப்பினர்" என்று பேட்டிகொடுத்தார். அதோடு, ஆட்சியர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில், வழக்கறிஞர் செந்தில்குமார்,  சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அடையாளம் தெரியாத 50 பேர்மீது ஆட்சியர் வீட்டுக்குள் அத்து மீறி நுழைய முயற்சிசெய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின்பேரில் ஏற்பட்ட வழக்கில், இன்று கரூர் குற்றவியல் நீதிமன்ற எண் 1-ல் நீதிபதி விஜயகார்த்தி முன்னிலையில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் ஆஜராகினர். இதனையடுத்து, இருவரது வழக்கறிஞர்களும் ஜாமீன்தார்களைக் காண்பித்து நிபந்தனை ஜாமீன் பெற்றனர். இதேபோல், இந்த இரு வழக்கிலும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமாணிக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 


 

கரூர் கலெக்டர் தொடர்ந்த வழக்கு  - செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு நிபந்தனை ஜாமீன்!

ஜாமீன் பெற்று வெளியில் வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம், "பொய்யான ஒரு வழக்கை ஆளும்கட்சியனரின் தூண்டுதலின் பெயரில், ஆட்சியர் போட்டுள்ளார். மேலும், ஆட்சியரின் வீட்டுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் பொய்யான குற்றச்சாட்டு. ஆட்சியர் சொல்வது உண்மையென்றால், இதுதொடர்பான, சி.சி.டிவி காட்சிகளை அவர் செய்தியாளர்களிடம் வெளியிட வேண்டும்" என்றார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு