Published:Updated:

`லிஸ்ட், கோட் வேர்டு, துப்பாக்கி!' - கௌரி லங்கேஷ் கொலையாளியின் `அதிர்ச்சி' வாக்குமூலம்

இந்துத்துவ எதிர்ப்பாளராகச் செயல்பட்ட கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றவர்களின் தொடர்ச்சியான கொலைகள் இந்தியா முழுவதும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. இவர்களின் வரிசையில் கன்னட வார இதழான லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரான கௌரி லங்கேஷ், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பசவன்குடியில் உள்ள லங்கேஷ் பத்திரிகை அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் சுடப்பட்டார்.

`லிஸ்ட், கோட் வேர்டு, துப்பாக்கி!' - கௌரி லங்கேஷ் கொலையாளியின் `அதிர்ச்சி' வாக்குமூலம்

இதில், கௌரி லங்கேஷின் மார்பு, கழுத்து, வயிறு போன்ற இடங்களில் குண்டு பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இவரின் கொலைக்கு காரணமானவர்களைக் கர்நாடக போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். பின்னர் கௌரி லங்கேஷின் வீட்டுக்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகள் இப்படிதான் இருப்பார்கள் என மூன்று பேரின் படங்களை வரைந்தும் வெளியிட்டனர்.

இதற்கிடையில், இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் போன்றே கௌரி லங்கேஷும் கொல்லப்பட்டுள்ளார். அதுவும் தபோல்கர், கல்புர்கியை சுட்டுக் கொன்ற அதே துப்பாக்கியில் கௌரி லங்கேஷும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்தனர். 

`லிஸ்ட், கோட் வேர்டு, துப்பாக்கி!' - கௌரி லங்கேஷ் கொலையாளியின் `அதிர்ச்சி' வாக்குமூலம்

இந்த நிலையில், கடந்த வருடம் மகாராஷ்டிராவில் கைத்துப்பாக்கி உற்பத்தி செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் நடத்திய ரெய்டில் சரத் கலாஸ்கர் என்பவரை அம்மாநில போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலைக்கும், பகுத்தறிவாளர்கள் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. 

கைது செய்யப்பட்ட சரத் கலாஸ்கர் அளித்துள்ள 14 பக்க வாக்குமூலம் தங்களிடம் இருப்பதாக ஆங்கில ஊடகமான NDTV செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,  `ஆகஸ்ட் 2016-ம் ஆண்டு கர்நாடகாவில் பெல்காமில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்துத்துவாவுக்கு எதிராகச் செயல்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் கௌரி லங்கேஷின் பெயர் இருந்ததால் அவரையும் கொலை செய்தோம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

`லிஸ்ட், கோட் வேர்டு, துப்பாக்கி!' - கௌரி லங்கேஷ் கொலையாளியின் `அதிர்ச்சி' வாக்குமூலம்

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பரத் குர்னேவின் வீட்டில்தான் அவரின் கொலைக்கான முழுமையான திட்டம் வகுக்கப்பட்டது. அவரின் கொலைக்கான திட்டத்துக்கு `நிகழ்வு (EVENT)’ எனப் பெயரிடப்பட்டது. இதையடுத்து, பரத் குர்னேவின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு மலைக்குச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காகப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயிற்சியில் அனைவரும் 15 முதல் 20 தோட்டாக்களை சுட்டு பயிற்சிப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் அனைவரும் தங்களின் கிராமங்களுக்குச் சென்றுவிட்டனர். இறுதியாக  `நிகழ்வு’ அன்று மட்டுமே மீண்டும் நகரத்துக்குள் வரவேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. கௌரி லங்கேஷை கொலை செய்த பிறகு அதற்குப் பயன்படுத்திய துப்பாக்கிகளை மும்பை- நாஷிக் நெடுஞ்சாலையில் மூன்று பாகங்களாக கழற்றி வீசிவிட்டதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு