Published:Updated:

‘துரைமுருகன் குழந்தைத்தனமாகப் பேசுகிறார்!’ - ஏ.சி.சண்முகம் கிண்டல்

‘துரைமுருகன் குழந்தைத்தனமாகப் பேசுகிறார்!’ - ஏ.சி.சண்முகம் கிண்டல்
‘துரைமுருகன் குழந்தைத்தனமாகப் பேசுகிறார்!’ - ஏ.சி.சண்முகம் கிண்டல்

‘துரைமுருகன் குழந்தைத்தனமாகப் பேசுகிறார்!’ - ஏ.சி.சண்முகம் கிண்டல்

தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் பேச்சு குழந்தைத்தனமாக இருப்பதாக, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் விமர்சனம் செய்திருக்கிறார்.

‘துரைமுருகன் குழந்தைத்தனமாகப் பேசுகிறார்!’ - ஏ.சி.சண்முகம் கிண்டல்

தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்காத தமிழக அரசைக் கண்டித்து, கடந்த 22-ம் தேதி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘‘ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் எடுத்துச்சென்றால் மாவட்டம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’’ என்று பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்திக்கு துரைமுருகன் மறுப்பு தெரிவித்தார். ‘‘நான் அப்படியெல்லாம் பேசவில்லை’’ என்று அறிக்கையையும் வெளியிட்டார்.

இந்த நிலையில், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூரில் உள்ள தன்னுடைய பென்ஸ் பார்க் ஹோட்டலில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக அதிகாரிகள் இரண்டு நாள்களாக ஆய்வுசெய்துவருகிறார்கள். இங்கிருந்து உபரி நீர்தான் கொண்டுசெல்லப்படுகிறது. மக்கள் எங்கு பாதிக்கப்படுகிறார்களோ, அங்கு சென்று அவர்களுக்கு உதவிசெய்வதுதான் மனிதாபிமானம். ஆனால், துரைமுருகன் தண்ணீர் கொடுக்க மாட்டேன், போராட்டம் செய்வேன் என்று குழந்தைத்தனமாகப் பேசியிருக்கிறார்.

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கே தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார் துரைமுருகன். இவர் இப்படிச் சொல்லும்போது, நாம் எப்படி ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிடம் சென்று தண்ணீரைக் கேட்க முடியும். நடப்பு கல்வியாண்டில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியிருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 660 மாணவ, மாணவிகள் ஏ.சி.எஸ் கல்வி நிறுவனங்களில் இலவசமாக உயர்கல்வி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வேலூரில் உள்ள பென்ஸ் பார்க் ஹோட்டலில் மாணவர்கள் வழங்கலாம்’’ என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு