Published:Updated:

`அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இலவச அரிசியின் நிலை?' - `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் பின்னணி

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரே நாடு என்ற கொள்கையை கையில் எடுத்தது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே அடையாள அட்டை(ஆதார்) உள்ளிட்ட வரிசையில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்னும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. 

`அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இலவச அரிசியின் நிலை?' - `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் பின்னணி

இது தொடர்பாக பேசிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், ``ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்னும் இந்தத் திட்டத்தை ஓராண்டுக்குள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். பொது விநியோகக் கடைகளில் இதற்கான வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சில மாநிலங்களில் இதற்கான வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் நாடு முழுவதும் கொண்டு வர வேண்டியுள்ளது. 

இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளர்கள் ஒரே ஒரு விநியோகக் கடையே நம்பி இருக்க வேண்டாம். சொந்த ஊர் விட்டு வேறு இடம் சென்றாலும் அவர்களால் அருகில் இருக்கும் கடைகளிலேயே அவர்களுக்கான பொருள்களை பெற்றுக்கொள்ள முடியும். வேலைக்காக மற்ற இடங்களுக்குச் செல்லுபவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்” என்றார். 

`அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இலவச அரிசியின் நிலை?' - `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் பின்னணி

உலக வர்த்தக நிறுவனம் இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் உணவுக்கான மானியத்தை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதா பெரும் விவாதத்தைக் கிளப்பியது. 

இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்னும் திட்டம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வேறு மாநிலத்தில் பணியாற்றும் ஒருவரால் சொந்த மாநிலத்தில் வழங்கும் பொருள்களை பெற முடியுமா உள்ளிட்ட பல சந்தேகங்கள் எழுந்தன. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்,  ``நேற்றுதான் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் திட்டமாக முழுமையடையவில்லை. ஆனால் இதற்கான அவசியம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும். ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் கார்டு வைத்திருப்பவர்கள் மாநிலத்தில் எங்கு வேண்டுமென்றாலும் பொருள்களை வாங்க முடியும். ஆனால், தமிழகம் போன்ற மாநிலங்களில் அவரவர் அந்த அந்தக் கடைகளில்தான் தங்களின் பொருள்களை பொது விநியோகத் திட்டத்தின்படி பெற முடியும். 

`அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இலவச அரிசியின் நிலை?' - `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் பின்னணி

எங்கு வேண்டுமென்றாலும் வாங்கலாம் என்பது ஒரே மாநிலத்தில் சாத்தியம். ஆனால், வேறு மாநிலம் என்று பார்க்கும் போது இதில் பல சிக்கல்கள் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பொது விநியோகத்திட்டம் என்பது வேறு வேறாக இருக்கிறது. இங்கு இலவச அரிசி கொடுக்கிறோம். சில மாநிலங்களில் மானிய விலையில் கொடுக்கிறார்கள். அரிசி அல்லாத வேறு பல பொருள்கள் தமிழகத்தில் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் உணவுப் பழக்கம் சார்ந்தும் தேவை சார்ந்து பொருள்கள் வழங்கப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் இதை எப்படிப் பெற முடியும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொருள்களை வழங்கும்படி முடிவு செய்வார்களா? அது எப்படி முறையானதாக இருக்கும். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் உலக வர்த்தக நிறுவனம் உணவுக்கான மானியம் வழங்குவதைத் தவிர்க்க மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதன் காரணமாக கூட இந்த நடவடிக்கை இருக்கலாம். மத்திய அரசு இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறது. அங்கு உலக வர்த்தக நிறுவனம் சொல்வதை ஏற்றுக்கொண்டு விட்டு வெளியே வந்து அதை  ஏற்கவில்லை எனச் சொல்கிறார்கள்.  

`அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இலவச அரிசியின் நிலை?' - `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் பின்னணி

உணவு தொடர்பாக 2014 -ம் ஆண்டு மத்திய அரசுடன் தமிழக அரசு ஓர் ஒப்பந்தம் போட்டது. அதன்படி தமிழகத்துக்கு கிலோ அரிசி 3 ரூபாய்க்கு வழங்குகிறார்கள். அதை, இங்கு இலவசமாக வழங்குகிறார்கள். இதற்கு ஆண்டுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த ஒப்பந்தம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிகிறது. அதன் பின்னர் அரிசியை 22.45 ரூபாய்க்கு வாங்க வேண்டி வரும். அப்போது எப்படி இலவசமாக அரிசியை வழங்க முடியும்? மாநில அரசின் செலவு என்பது அக்டோபர் மாதத்துக்குப் பின்னர் 18,000 கோடியாக மாறும். இதை, மாநில அரசு எப்படி ஏற்கும். 

பொது விநியோகத்தை மத்திய அரசு கையில் எடுக்கும் திட்டமாகத்தான் இதைப் பார்க்க முடியும். நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளை கொடுக்க முடியும். அதற்கான இயந்திரங்களை வழங்க முடியும். ஆனால், அத்தியாவசியப் பொருள்களை எப்படிக் கொடுக்கப் போகிறீர்கள்?. நடைமுறையில் இது சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் தெரிகிறது. இது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்” என்றார் விரிவாக.. 

அடுத்த கட்டுரைக்கு