Published:Updated:

`வெறும் முழக்கங்கள் மட்டும் தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வாகாது!' - வாணியம்பாடியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பேரணி

அமைச்சர் நிலோஃபர் கபிலின் சொந்தத் தொகுதியான வாணியம்பாடியில் தண்ணீர்ப் பிரச்னையை வலியுறுத்தி ரஜினி மக்கள் மன்றத்தினர் நடத்திய பிரமாண்ட பேரணி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

`வெறும் முழக்கங்கள் மட்டும் தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வாகாது!' - வாணியம்பாடியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பேரணி

வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தண்ணீர்ப் பிரச்னை கடுமையாக நிலவும் பகுதிகளில் தினமும் இலவசமாகத் தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது. கடந்த 23-ம் தேதி மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், நதிகள் இணைப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி சோளிங்கரில் மாவட்டச் செயலாளர் என்.ரவி தலைமையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பிரமாண்ட பேரணியை நடத்தினர். இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பேரணியைப் பார்த்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிர்ந்துபோயினர்.

`வெறும் முழக்கங்கள் மட்டும் தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வாகாது!' - வாணியம்பாடியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பேரணி

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபிலின் சொந்தத் தொகுதியான வாணியம்பாடியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பிரமாண்ட பேரணியை நடத்தி அசத்தியிருக்கிறார்கள். இன்று காலை வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி முன்னிலையில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். ‘‘கண்ணீரைத் தடுக்க தண்ணீரைச் சேமிப்போம்’’ போன்ற விழிப்புணர்வு வாசகங்களைக் கையில் ஏந்தி முழக்கமிட்டுக் கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாகச் சென்றனர்.

`வெறும் முழக்கங்கள் மட்டும் தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வாகாது!' - வாணியம்பாடியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பேரணி

இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ரவி பேசுகையில், ‘‘ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்கிறோம். மழை நீரைச் சேமிக்கத் தயாராவோம். நிலத்தடி நீரைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். வெறும் முழக்கங்கள் மட்டுமே தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வாகாது. நாம் அனைவரும் மக்கள் தலைவர் வழியில் பயணிப்பவர்கள். அதனால்தான் யார் மீதும் குற்றம் சுமத்துவதில்லை. மக்கள் பிரச்னையில் மட்டும் பங்கெடுக்கிறோம்’’ என்றார். அமைச்சரின் தொகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தினரின் செயல்பாடுகளால் ஆளுங்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். பேரணிக்கு போலீஸாரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பாதுகாப்பு வழங்கினர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு