Published:Updated:

``இங்கு நடப்பது எல்லாம் சசிகலாவுக்குத் தெரியும்!” - மதுரையில் டி.டி.வி.தினகரன்

``இங்கு நடப்பது எல்லாம் சசிகலாவுக்குத் தெரியும்!” - மதுரையில் டி.டி.வி.தினகரன்
``இங்கு நடப்பது எல்லாம் சசிகலாவுக்குத் தெரியும்!” - மதுரையில் டி.டி.வி.தினகரன்

கட்சித்தாவல் முறை என்பது கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்தே இருந்துவருகிறது. எனவே, நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்வதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என டி.டி.வி.தினகரன் பேட்டியளித்தார்.

``இங்கு நடப்பது எல்லாம் சசிகலாவுக்குத் தெரியும்!” - மதுரையில் டி.டி.வி.தினகரன்

 மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ``புதிய மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்தெடுப்பதற்காக மதுரையில்  ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறோம். உண்மையான தொண்டர்கள், என்றும் எங்கள் பக்கம் இருப்பார்கள். நிர்வாகிகள் செல்வதால் ஒரு கட்சியின் பலம் குறையும் என்று நான் நினைக்கவில்லை. தி.மு.க அதிக தொகுதிகளில் வென்று இருப்பதால் பதவிக்காகச் சில பேர் தி.மு.க சென்றுகொண்டிருக்கின்றனர்.

கருணாநிதி, அண்ணா ஜெயலலிதா எனத் தலைவர்கள் ஆட்சிக்காலத்திலேயே நிர்வாகிகள் கட்சித்தாவும் முறை நடந்திருக்கிறது. இதனால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தங்க தமிழ்ச்செல்வனை நேரில் அழைத்து ஊடகங்ளுக்குத் தவறாகப் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியும் தொடர்ந்து அவர் அதைச் செய்து வந்தார். இதற்காக தான் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வந்தாரா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் அ.தி.மு.க-வில் இருந்து இருக்கலாம் ஏன் எதற்காக வந்தார் என்று எங்களுக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தெரியவில்லை.

பதவி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஏழ்மையில் இருந்து வருகிறார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறிய கருத்தை, அவர் இரவு 11 மணிக்கு மேல் பேசினாரா, காலையில் பேசினாரா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள். கடந்த 6 மாதமாக  அவருடைய நடவடிக்கை சரியில்லை.

செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின் பேரில்தான் தங்க தமிழ்ச்செல்வன் அ.ம.மு.க-வில் இணைந்தார். பின்னர், அவருக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது இருவரும் தி.மு.க-வில் உள்ளனர். அ.தி.மு.க-வில் இணைவதற்கு ஓ.பி.எஸ் இடையூறாக இருப்பதால்தான் தி.மு.க-வில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்துள்ளார். சசிகலாவுக்கு நடப்பது எல்லாம் தெரியும் முக்கிய முடிவுகளை அவரிடம் கலந்தாலோசித்துதான் எடுக்கிறேன். 

நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் தண்ணீர்ப் பிரச்னை இல்லை என்று ரவீந்திரநாத் குமார் பேசியதற்கு அவருக்கு வாக்களித்த தேனி மக்களும், தமிழக மக்களும்தான் பதில் கூற வேண்டும். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டில் தண்ணீர் இல்லையென்றால் கொடுப்பார்கள். ஆனால், மக்களுக்குத் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உடனடியாக மக்களின் பிரச்னை அரசு சரி செய்ய வேண்டும்" என்றார்.

Vikatan