Published:Updated:

` மோடியை ஆதரித்துப் பேசினேனா?!' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ

` மோடியை ஆதரித்துப் பேசினேனா?!' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ
` மோடியை ஆதரித்துப் பேசினேனா?!' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ

``உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்’ எனச் சமீபத்தில் சத்யமூர்த்திபவனில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், காங்கிரஸின் கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதோடு, குறிப்பிட்ட சில பகுதியை ஒதுக்கி, அதற்குத் தேர்தல் பொறுப்பாளராகத் தன்னை நியமிக்க வேண்டும் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. 

` மோடியை ஆதரித்துப் பேசினேனா?!' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ

இதையடுத்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கராத்தே தியாகராஜன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை இடைநீக்கம் செய்து நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார் காங்கிரஸின் பொதுச்செயலாளர் வேணுகோபால். 

` மோடியை ஆதரித்துப் பேசினேனா?!' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ

இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் கராத்தே தியாகராஜன். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டிருந்த அறிக்கையில் கட்சியைச் சேர்ந்த யாரும் பேசக் கூடாது எனத் தெரிவித்திருந்தார். 

` மோடியை ஆதரித்துப் பேசினேனா?!' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ

ஆனால், அந்த அறிக்கை வெளியான பிறகு விஜயதரணி எம்.எல்.ஏ சில தொலைக்காட்சிகளில், பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசியது சரியானது என மோடிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்றைய கூட்டத்தில் என்னைப்போல் பலபேர் பேசினார்கள். நான் பேசியது தவறு என்றால் அன்றே மாநில தலைவர் அழகிரி என்னைக் கண்டித்திருக்கலாம் ஏன் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரை தலைவர் ராகுல் காந்திக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்” என்று பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விஜயதரணி எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு பேசினோம், ``காங்கிரஸின் தோல்விக்குப் பின்னர் கட்சியை மறு ஆய்வு செய்யும் பணிகளில் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். அந்த வேளையில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸுக்கு சில அறிவுரை செய்தார். இதேபோன்று இரண்டு நாள்கள் தொடர்ந்து காங்கிரஸுக்கு அட்வைஸ் செய்து பேசினார். 

` மோடியை ஆதரித்துப் பேசினேனா?!' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ

என்னுடைய பேட்டியில், தொடர்ந்து எங்கள் தலைவர் ராகுல் காந்தியே காங்கிரஸின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கூறினேன். மேலும், காங்கிரஸே வேண்டாம் என்று கூறிய மோடி தற்போது காங்கிரஸை ஊக்குவிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். காங்கிரஸ் இல்லாமல் ஆளும் கட்சியால் எதையும் சந்திக்க முடியாது என்பதை பிரதமர் உணர்ந்துள்ளார். இந்த நாட்டுக்குக் காங்கிரஸ் தேவை என்பது பலருக்கும் உணர்த்தப்பட்ட ஒன்று அதில் மோடியும் உள்ளடக்கம். இரண்டு நாள்கள் மோடி எங்களுக்குக் கூறிய அட்வைஸை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தொடர்ந்து எங்களுக்கு அட்வைஸ் செய்வதையும், எங்களை விமர்சிப்பதையும் தவிர்த்து நாட்டு மக்கள் மீதும் கவனம் செலுத்துங்கள் எனப் பேசினேன். என் முழுப் பேட்டியையும் பார்த்துவிட்டு கராத்தே தியாகராஜன் போன்றவர்கள் விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்.  

பேட்டியில் நான் பேசியது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியவர்களுக்கு  விளக்கமளித்துவிட்டேன். என் பேட்டி தொடர்பான விவரத்தையும் மேலிடத்துக்கு அளித்துவிட்டேன்” எனக் கூறி முடித்தார். 
 

Vikatan