Published:Updated:

‘நான் திருடிப் பேசினேனா?’ - நாடாளுமன்ற பேச்சு விமர்சனத்தால் கொதிக்கும் மஹூவா

சத்யா கோபாலன்
‘நான் திருடிப் பேசினேனா?’ - நாடாளுமன்ற பேச்சு விமர்சனத்தால் கொதிக்கும் மஹூவா
‘நான் திருடிப் பேசினேனா?’ - நாடாளுமன்ற பேச்சு விமர்சனத்தால் கொதிக்கும் மஹூவா

இந்தியாவில் நடக்கும் பா.ஜ.க ஆட்சியில் பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் இருப்பதாகக் கடந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹூரா மோத்ரா பேசியிருந்தார். இவரின் முதல் நாடாளுமன்ற பேச்சின் மூலம் இந்தியா முழுவதும் வைரலானார் மஹூவா. 

‘நான் திருடிப் பேசினேனா?’ - நாடாளுமன்ற பேச்சு விமர்சனத்தால் கொதிக்கும் மஹூவா

அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் ஏழு குறியீடுகள் இருப்பதாகவும் அவை அனைத்தும் பா.ஜ.க ஆட்சிக்குப் பொருந்துவதாகவும் கூறினார். மனித உரிமைகள், அவமதித்தல், கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், ஊடகங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற செயல்களில் அரசு ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசமுடியாமல் ஆளும் கட்சி எம்.பி-க்கள் வாயடைத்து இருந்தனர்.

‘நான் திருடிப் பேசினேனா?’ - நாடாளுமன்ற பேச்சு விமர்சனத்தால் கொதிக்கும் மஹூவா

மஹூவாவின் பேச்சு,  வாஷிங்டன் மாத இதழின் ஆசிரியர் ஒருவர் எழுதி அந்த இதழில் வெளிவந்தவை என்று பா.ஜ.க-வினர் மஹூவாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தன் மீதான விமர்சனத்துக்குப் பதில் அளித்துள்ள மஹூவா, “அரசியல் விஞ்ஞானி லாரன்ஸ் டபிள்யூ. ப்ரிட் எழுதிய பாசிசத்தின் 14 குறியீடுகள் ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றில் இந்தியாவுக்குப் பொருந்தும் 7 குறியீடுகளை நான் பார்த்தேன். அதைப் பற்றித்தான் விளக்கமாக நாடாளுமன்றத்தில் பேசினேன். என் பேச்சு முழுவதுமாக என் மனதில் இருந்து வந்ததுதான். தன் மனதுக்குச் சரி எனத் தெரிந்ததால் அதைப் பலரும் பகிர்ந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மஹுவாவின் நாடாளுமன்ற பேச்சு குறித்து வாஷிங்டன் மாத இதழ் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில், “இந்திய அரசியல் தலைவர் மஹூவா, 2017-ம் ஆண்டு எங்கள் இதழில் வெளியான பகிர்வுகளை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் எனப் பரவலாகக் கூறப்படுகிறது. இந்திய அரசியல் சர்ச்சைக்கு நடுவில் நாங்கள் சிக்கியுள்ளது இதுவே முதல்முறை. எங்களின் தரவுகளை எடுத்து சோதனை செய்ததில் மஹூவா எங்கள் இதழில் இருந்து கருத்துகளை திருடவில்லை என்றே தோன்றுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நான் திருடிப் பேசினேனா?’ - நாடாளுமன்ற பேச்சு விமர்சனத்தால் கொதிக்கும் மஹூவா

தொடர்ந்து வாஷிங்டன் இதழின் ஆசிரியர் மார்டின் லாங்மேன் தெரிவித்துள்ள கருத்தில், “நான் இந்திய சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவன். ஏனெனில் இந்திய அரசியல் தலைவர் என் கருத்துகளைத் திருடிப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்கும்போது நகைச்சுவையாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள வலதுசாரிகள் அனைவரும் ஒரே மாதிரி உள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார். 

‘நான் திருடிப் பேசினேனா?’ - நாடாளுமன்ற பேச்சு விமர்சனத்தால் கொதிக்கும் மஹூவா