Published:Updated:

பழுதாகி நின்ற படகுடன் 4 மீனவர்களை பிடித்து சென்றது இலங்கை கடற்படை

பழுதாகி நின்ற படகுடன் 4 மீனவர்களை பிடித்து சென்றது இலங்கை கடற்படை
பழுதாகி நின்ற படகுடன் 4 மீனவர்களை பிடித்து சென்றது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: பழுதாகி நின்ற படகையும் அதில் இருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழுதாகி நின்ற படகுடன் 4 மீனவர்களை பிடித்து சென்றது இலங்கை கடற்படை

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 57 மீனவர்களையும் அவர்கள் மீன்பிடிக்க சென்ற 12 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்று அனுராதபுரம் மற்றும் ஊர்காவல்துறை சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அச்சமடைந்து, கடந்த 2 நாட்களாக 300க்கும் குறைவான விசைப்படகுகளே மீன்பிடிக்க சென்றன.

இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது விசைபடகில் ஜஸ்டின், வில்சன், ஜான்சன், பரலோகராஜ் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் (26.06.13) மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு மீன்பிடித்து கொண்டிருந்த போது இவர்களது படகில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை அந்த படகும் அதில் சென்ற 4 மீனவர்களும் கரை திரும்பவில்லை.

##~~##
கரை திரும்பிய மற்ற மீனவர்களிடம் விசாரித்ததில் ஜஸ்டினின் படகு பழுதானது தெரியவந்தது. இதனால் படகில் ஏற்பட்ட பழுதினை சரிசெய்துவிட்டு நேற்று மாலை கரை திரும்பி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பழுதாகி நின்ற படகினையும் அதில் இருந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்து தலைமன்னார் கொண்டு சென்றுவிட்டதாகவும் தற்போது தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே 57 மீனவர்கள் இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றிருப்பது மீனவர்களின் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.

இரா.மோகன்