Published:Updated:

ம்...ம்...''புண்ணியம் கிடைக்கும்!''

ம்...ம்...''புண்ணியம் கிடைக்கும்!''

ம்...ம்...''புண்ணியம் கிடைக்கும்!''

ம்...ம்...''புண்ணியம் கிடைக்கும்!''

Published:Updated:
ம்...ம்...''புண்ணியம் கிடைக்கும்!''
ம்...ம்...''புண்ணியம் கிடைக்கும்!''

'''தானே’ துயர் துடைக்கும் பணியை விகடன் முன்னெடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஓவியக் கண்காட்சியை விகடன் நடத்துகிறது. உங்களால் இயன்றது... குறைந்தது ஓர் ஓவியத்​தைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடையாகக் கொடுங்கள்’ - விகடன் இப்படிக் கேட்டதும், சர்வதேசப் புகழ் பெற்ற முன்னணி ஓவியர்கள் தொடங்கி ஓவியக் கல்லூரி மாணவர்கள் வரை தங்கள் ஓவியங்களை மனமுவந்து உற்சாகமாக வழங்கினார்கள். 275 ஓவியர்கள் இணைந்து 357 ஓவியங்களைக் கொடுத்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கண்காட்சியைத் திறந்து வைக்க ஆளுநர் ரோசய்யாவை அணுகியதும், உடனே சம்மதம் தெரிவித்தார். மார்ச் 5-ம் தேதி கண்காட்சியைத் திறந்து வைத்தவர், அவருடைய தனிச்செயலர் சீராளன் வரைந்த ஓவியம் ஒன்றையும் நன்கொடையாகத் கொடுத்தார்.

''தமிழ்ச்சமூகம் எப்போதெல்லாம் பெரும் இடர்களை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் மக்களோடு கைகோத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் உறுதியாக இருக்கிறது விகடன் குழுமம். 2003-ல் வானம் பொய்த்து, தமிழகம் பெரும் வறட்சியைச் சந்தித்த நேரத்தில், விவசாயிகளின் துயர் துடைக்கும் நோக்கத்தில் 'தத்தெடுப்போம் கிராமத்தை’ என்ற திட்டத்தை முன்னெடுத்தோம். வாசகர்களுடன்

ம்...ம்...''புண்ணியம் கிடைக்கும்!''

கைகோத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட தஞ்சைப் பகுதிக் கிராமங்களில் ஆறு மாத காலம் அரிசி வழங்கி, ஆயிரக்கணக்கானோர் பசி துடைத்தோம். 2004-ல் சுனாமிப் பேரழிவின்போது நிதி திரட்டி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, அதை அளித்தோம். இப்போது 'தானே’ புயல் ஏற்படுத்தி இருக்கும் இழப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் தலையெடுக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்ற சூழலில், எங்களுடைய பொறுப்பு இன்னும் பெரிதாகிறது'' என்று, விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் பேசியதைக் கூர்ந்து கவனித்​தார் ஆளுநர் ரோசய்யா.

விகடன் வாசகர்கள் 'தானே துயர் துடைப்போம்’ திட்டத்துக்கு அளிக்கும் நன்கொடை அன்றைய தினம் ஒரு கோடி ரூபாயைத் தாண்டிய செய்தியை ஆளுநரிடம் பகிர்ந்துகொண்டதும், ''இத்தகைய பேரிடர்களை எதிர்கொள்ளும் பெரும் பணியில் அரசோடு, இப்படி ஒவ்வொருவரும் கை கோப்பது முக்கியம்!'' என்று குறிப்பிட்ட ஆளுநர் ரோசய்யா, இந்த ஓவியக் கண்காட்சிக்குப் பங்களித்த ஓவியர்களுக்கும் விகடன் வாசகர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்​தார்.

கண்காட்சிக்கு வந்த ஓவியர்கள் அனைவரும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த கடலூர் காட்சிகளைப் பார்த்து கண் கலங்கினார்கள். ''எவ்வளவு பெரிய சோகத்துக்கு நாங்கள் உதவி இருக்கிறோம். விகடன் இதை முன்னெடுத்து இருக்காவிட்டால், நாங்கள் உதவி செய்யாமல் தவறி இருப்போமே'' என்று சொன்னார்கள். பத்திரக்கோட்டை, புத்தூர் ஆகிய கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்திய புகைப்படங்கள், நடுத்திட்டு கிராமத்தில் மரம் வெட்டும் பணிகள் பற்றிய காட்சிகளைப் பார்த்து, ''விகடன் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் சமூகத்துக்கு நல்லதை நிச்சயம் செய்வீர்கள்'' என்றனர் நெகிழ்ச்சியாக.

கண்காட்சியில் பங்கேற்ற ஓவியர்கள் நெஞ்சம் நெகிழப் பேசினார்கள்.

''இயற்கையின் சீற்றத்தால் யார் பாதிக்கப்படுவோம் என்பதை யார் அறிவார்? இன்றைக்கு நம் சகோதரர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் பாதிப்பு நாளை நமக்கே ஏற்படாது என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? இயற்கை இன்று நம்மை கொடுக்கக் கூடிய இடத்தில் வைத்திருப்பது நமக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை'' என்றார் மூத்த ஓவியர் சாம் அடைக்கலசாமி.

ம்...ம்...''புண்ணியம் கிடைக்கும்!''

''இதுபோன்ற ஒரு சூழலில் உதவவில்லை என்றால், நான் என்ன மனிதன்? இதற்கு என் உழைப்பு பயன்படாவிட்டால், என்னுடைய தொழிலை நான் எப்படிக் கலை என்று சொல்ல முடியும்? ஒரு மரம் பூமியில் விழக்கூடிய காட்சியையே என்னால் பார்க்க முடியவில்லை. நினைத்துப்பாருங்கள்... பல்லாயிரக்கணக்கான மரங்கள் சில மணி நேரங்களில் வேரோடு சாய்ந்திருக்கின்றன. மரங்கள் இல்லாத ஊரில் விவசாயிகள் எப்படிப் பிழைக்க முடியும்? எவ்வளவு பெரிய துயரம்?'' என்றார் ஓவியர் பத்மவாசன். 10-க்கும் மேற்பட்ட தன்னுடைய ஓவியங்களை இந்தக் கண்காட்சிக்காக அளித்தவர் இவர்.

''சர்வதேச அளவுக்கு ஒரு பிரமாண்டமான கண்காட்சியாக இது அமைந்திருக்கிறது. விகடனால் மட்டுமே இது சாத்தியம்'' என்று நெகிழ்ந்தார் ஓவியர் செழியன்.

''புயலால் நம் மக்கள் கொடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி வந்தபோதே துடித்துப்போனேன். எப்படியாவது அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், எப்படி உதவுவது என்று தெரியவில்லை. விகடன் எனக்குச் சரியான வழியைக் காட்டியது'' என்றார் ஓவியர் அனாமிகா.

ம்...ம்...''புண்ணியம் கிடைக்கும்!''

இந்தக் கண்காட்சிக்கு ஓவியங்களை அளித்தவர்​களில் 13 வயது ப்ரணவும் 8 வயது லோகப்ரியனும் அடக்கம். ஓவியர் பத்மவாசனின் குழந்தைகள் இவர்கள். ''நீங்கள் எதற்காக உங்கள் ஓவியங்களைக் கொடையாக அளித்தீர்கள்'' என்று கேட்டோம்.

''புயல் அடிச்சு நிறைய பேர் செத்துப்போய்ட்​டாங்களா, நிறையப் பேருக்குச் சாப்பிடவே ஒண்ணும் இல்லையா, இந்த ஓவியங்களை வித்து அவங்களுக்கு உதவுவாங்க'' என்றார்கள். ''சரி, இப்படி ஓவியங்களைக் கொடுப்பதால் உங்களுக்கு என்ன பயன்?'' என்று கேட்டோம். கொஞ்ச நேரம் ஆழமாக யோசித்த அந்தக் குட்டிகள், ''ம்... ம்... புண்ணியம் கிடைக்கும்!'' என்று மழலைக் குரலில் சொன்னார்கள்.

ம்...ம்...''புண்ணியம் கிடைக்கும்!''

இதில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கியமான தகவல்... நான்கு லட்சம் மதிப்பிலான ஓவியமும் 2,000 மதிப்பிலான ஓவியமும் ஒரே இடத்தில் அடுத்தடுத்து காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்ததுதான். தமிழகத்தில்... இந்தியாவில் இப்படி ஒரு ஜனநாயகப்பூர்வமான சமத்துவ கண்காட்சி இதுவரை நடந்ததில்லை என்று அனைத்து ஓவியர்களும் மகிழ்கின்றனர். இந்திய - சீனப் போரின் போது சென்னை எல்.ஐ.சி. கட்டடத்தின் நான்காவது மாடியில் ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தி அதன் மூலமாக நிதி திரட்டித் தரப்பட்டதாம். 50 ஆண்டுகள் கழித்து நடக்கும் மிகப் பெரிய கலைச் சங்கம் என்று ஓவியர்கள் இதனை வர்ணித்தார்கள்.

லட்சங்கள், ஆயிரங்கள் மதிப்புள்ள தங்களின் ஓவியங்களைக் கொடுத்த இந்தக் கலைஞர்களும் கண்காட்சிக்கு வந்து தங்களது பங்களிப்பை இன்னும் உயர்த்த மற்ற கலைஞர்களின் படைப்பிலும் ஒன்றை வாங்கிச் செல்வதைப் பார்த்த போது தமிழக ஓவியர்களின் பெருந்தன்மை பெருமைக்குரியதாக இருந்தது.

வாசகர்களே வாருங்கள், கை கொடுப்போம்... 'தானே’ துயர் துடைப்போம்!

-  விகடன் 'தானே’ துயர் துடைப்பு அணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism